• August
    22
    Thursday

Main Area

எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலினுக்கு தூபம் போட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... உளவுத்துறை ரிப்போர்ட்டால் கும்மாங்குத்து..!

அதிமுக தலைமை  தங்களது  தோல்விக்கு பல காரணங்களை குறிப்பிட்டு சொன்னாலும், குறிப்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைதான் தோல்விக்கு காரணமாக பார்க்கிறார்கள்.  இதனால், எந்த தொகுதியில் தபால் ஓட்டு  அதிகமாக பதிவாகி இருக்கிறது. எந்த எம்.எல்.ஏ., தபால் ஓட்டால் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்கிற தகவல்களை எல்லாம் சேகரித்துவிட்டார்கள்.உதயநிதி

அதன் முதல்படிதான் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கும் தடை போட்டு  விட்டார்கள். அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிருகிறார்கள்.  அதிரடி டிரான்ஸ்பர்கள் இருக்கலாம் என்கிற தகவலும் கோட்டை வட்டாரத்தில் ஓடுகிறது.  அதுமட்டுமா? இந்த ஆட்சி நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்ற நினைப்பில் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்பாக மாறிவிட்டார்கள். உள்ளூர் அமைச்சர்கள், அதிமுக கூட்டணியினருக்கு ஒத்துழைக்க  மறுத்துவிட்டார்கள். இதுவும் உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் போய் இருக்கிறது. எடப்பாடி

ஆகவே அதிகபட்சம் 5 முதல் 10 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் அதை பற்றி கவலைப்படவில்லையாம்.  வேறு துறைக்கு மாற்றப்போகிறார்கள். எங்கே இருந்தால் என்ன என்ற மனநிலையில்தான் இப்போதைக்கு இருக்கிறார்கள்.
 

Thijai Thu, 05/30/2019 - 08:56
எடப்பாடி பழனிசாமி edappadipalanisamy IAS M K Stalin மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தமிழகம்

English Title

IAS officials stalled for Stalin

News Order

0

Ticker

1 சதி நடக்காததால் சஞ்சலத்தில் எடப்பாடி... 30 ஐ நம்பி இருந்தவருக்கு ஆப்பு வைத்த அடிப்பொடிகள்..!

எப்படியும் 30 தொகுதிகளில் வெற்றி என விருமாப்போடு இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது தான் முதல்முறையாக தோல்வி பயம் எட்டி பார்த்திருப்பதாக கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி

சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை டெல்லியில் பேசும்போது தேர்தல் முடிவுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என பேசினார். அவர் பேசி 24 மணி நேரத்துக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி  தன் டிராக்கை திசை திருப்பி கட்சியை உடைக்க சதி நடக்கிறது என்று ஆவேசத்துடன் பேசி வருகிறார். இப்படி டிராக்கை மாற்றி பேசுவதற்கு  பின்னால் பெரிய சதி வேலை நடந்து இருப்பதாக கூறுகிறார்கள்.

அந்த சதி என்னவென்றால், ஒருவர் 250 கள்ள ஓட்டு போட்டால் அவர்களுக்கு கனிசமான பணம். ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்கு தனி கவனிப்பு. பூத் ஏஜென்ட்டுகளை திசை திருப்பியும், போலீசை வைத்து மிரட்டியும் பணிய வைப்பது தான் அஜெண்டா. மேலும், பழைய வழக்குகளை தூசு தட்டி எடுத்து அடுத்த தேர்தல்களில் போட்டியிட முடியாத படி செய்வோம்னு சொல்லி மிரட்ட மேலிடத்தில் இருந்து உத்தரவுகள் பறந்திருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி

இந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கும் என எடப்பாடி நம்பியதால் எப்படியும் 30 தொகுதிகளில் வெற்றி. இடைத்தேர்தலிலும் டபுள் டிஜிட்டில் அடித்து தூக்கி ஆட்சியை காப்பாற்றி விடலாம் என பெரும் நம்பிக்கையோடு இருந்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் அப்படி எதுவும்  வாக்குச்சாவடிகளில் நடக்கவில்லை என்கிற தகவல்  ஒவ்வொன்றாக இப்போதுதான் எடப்பாடிக்கு தெரிய வந்திருக்கிறது. அமைச்சர்கள் செல்வாக்குள்ள தொகுதிகளில் கூட அப்படி எதுவும் நடக்கவில்லை. பலரும் நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி

இதனால் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மக்களவை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளதால், 30 என நம்பி இருந்தேன்... இப்போது மொத்தமும்  போகப்போகிறதே... என நொந்து நூடுல்ஸாகிக் கிடக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. 

Thijai Tue, 05/07/2019 - 07:43
எடப்பாடி பழனிசாமி தமிழிசை edappadi palanisamy admk Modi எடப்பாடி பழனிசாமி தமிழகம்

English Title

Failing to be afraid is edappadi Palanisamy

News Order

0

Ticker

1 புரோட்டா கடைக்கு திமுக, கொடநாடுக்கு எடப்பாடி பழனிசாமி?!

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பு புரோட்டா கடை, பிரியாணி கடையில் சண்டை போடுகிறது என விமர்சனம் செய்ததை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

eda

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பு புரோட்டா கடை, பிரியாணி கடையில் சண்டை போடுகிறது என தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆட்சியில் இல்லாத போதே இப்படியென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பதை யோசித்து பாருங்கள் என பேசுகிறார்.

திமுக

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மேல் அதிருப்தியில் உள்ள நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகின்றனர்.ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாட கொலைகள், ஸ்டெர்லைட் படுகொலைகளை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

முகி

புரோட்டா, பிரியாணி எல்லாம் இருக்கட்டும், முகிலன் எங்கே? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Arunpandiyan Sat, 03/23/2019 - 15:36
எடப்பாடி பழனிசாமி திமுக மக்களவை தேர்தல் தேர்தல் பிரச்சாரம் திமுக - அதிமுக தேர்தல் களம்

English Title

Netizens make fun of edappadi palanisamy?!

News Order

0

Ticker

0 பண மழை பொழியும் 9 தொகுதிகள்; எடப்பாடி பழனிசாமி உத்தரவு?!

மக்களவை தேர்தல் வேலைகள் ஒருபுறம் இருக்க, அதிமுக தரப்பு இடைத்தேர்தல் வேலைகளில் தீவிரம்காட்ட துவங்கியுள்ளது. அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அதனால் ஜெயிப்பதற்காக அதிமுக தரப்பு பணத்தை வாரி இறைக்கவுள்ளது!

114 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தது அதிமுக தரப்பு, சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் நேற்று காலமானார். தற்போது 113 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அதிமுக பக்கம் உள்ளனர். இதில் தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக உள்ளனர். இன்னும் 3 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

தமீமுன் அன்சாரி - கருணாஸ்

thamimun ansari

அதிமுக பக்கம் ஸ்ட்ராங்காக இருப்பது 108 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான், பெரும்பான்மையை நிரூபிக்க 116 எம்.எல்.ஏக்கள் தேவை.மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அதிமுகவுக்கு பிரச்சனையில்லை, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் அதிமுக அதிகாரத்தை பிடிக்க முடியும். அதனால் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை டார்கெட் செய்து நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது.

​​edapadi palanisamy

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 தொகுதிகளில் 9 தொகுதிகள் வடமாவட்டம் மற்றும் கொங்கு பெல்ட்டில் வருகிறது. பிற தொகுதிகளை விட அதிமுக தரப்புக்கு இந்தப் பகுதியில் ஆதரவு அதிகம், எனவே இந்த 9 தொகுதிகளில் வெற்றிபெற கோடிக்கணக்கில் பணத்தை இறக்கவுள்ளது அதிமுக! அதிகாரம் கைக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், தேர்தலுக்கு தாராளமாக செலவு செய்து வெற்றிபெற பாருங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாராம்!

பணம்

அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் பணப்பெட்டியுடன் ரெடியாக இருக்கிறார்கள்! மக்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Arunpandiyan Sat, 03/23/2019 - 11:49
எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல் 18 சட்டமன்ற தொகுதிகள் அதிமுக edappadi palanisamy byelection 18 assembly polls admk எடப்பாடி பழனிசாமி தேர்தல் களம்

English Title

9 byelection polls where admk spent more money?!

News Order

0

Ticker

0 தேர்தல் செலவுக்கு எத்தனை கோடி; விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு பின்னணி?!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் செலவு பற்றியும், தொகுதிகள் வழங்குவது பற்றியும் இதில் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தேமுதிக

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பிய விஜயகாந்த்-ஐ அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து வந்தனர். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்த பின்பு, பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயகாந்த்-ஐ சந்தித்தார். இந்த சந்திப்பு இரு கட்சிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக தரப்பு ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ஐ சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.

தொகுதிகள் வழங்குவது பற்றி ஆலோசனை

அதிமுக

இந்த சந்திப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச்செயலாளர் சுதிஷ், அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேர்தல் பங்கீடு குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். தேமுதிகவுக்கு 4 சீட்டுகள் மட்டுமே கொடுத்திருந்தாலும், தொகுதிகள் ஒதுக்குவதில் கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் என தேமுதிக அதிமுக தரப்பிடம் கேட்டுக்கொண்டது! இதுகுறித்து முடிவு செய்யவும், தேர்தல் செலவு பற்றி ஆலோசனை நடத்தவுமே இந்த சந்திப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காகதான் விஜயகாந்த்-ஐ பாமக நிறுவனர் ராமதாஸ் முன்பே சந்தித்தது! தேமுதிக தரப்பு கேட்கும் தொகுதிகள் வழங்குவது பற்றிய ஆலோசனை முடிந்ததும், தேர்தல் செலவு பற்றி விவாதிக்கப்பட உள்ளதாம்!

தேர்தல் செலவு

விஜயகாந்த்

தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பது, அதற்காக செய்யப்படும் செலவு. போஸ்டர், பேனர், டிவி விளம்பரம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொண்டர்களுக்கான செலவு என கிட்டத்தட்ட குறைந்த பட்சம் ஒரு தொகுதிகக்கு 12 கோடி ரூபாய்க்கு மேலாவது ஆகும் என பொது வெளியில் விவாதிக்கப்படுகிறது! தேமுதிக தரப்பு 30 கோடி ரூபாய் வரை வழங்க வாய்ப்புள்ளதாம்! அதற்கு மேல் கூட்டணி அமைத்தமைக்காக தேமுதிகவின் தேர்தல் செலவில் அதிமுகவும் பங்கெடுக்கும் என்று கூறப்படுகிறது.

Arunpandiyan Sat, 03/16/2019 - 14:06
தேமுதிக அதிமுக கூட்டணி விஜயகாந்த் எடப்பாடி பழனிசாமி தேர்தல் செலவு admk dmdk alliance lok sabha election 2019 vijayakanth edappadi palanisamy meet விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழகம்

English Title

How much amount from dmdk side; reason behind the meeting of vijayakanth and edappadi palanisamy

News Order

0

Ticker

0 கொடநாடு கொலைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அம்மா ஆட்சி என்ன ஆச்சு?!

தமிழகம் எப்போதும் காணாத மோசமான அரசியல் சூழலை இப்போது சந்தித்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, இவ்வளவு மோசமான சூழல் இருந்ததில்லை. அவர் மறைவுக்குப் பின் தமிழகம் முழுக்க பிரச்சனைகள், போராட்டங்கள் என தொடர்ந்து வருகிறது. அம்மா ஆட்சியை வழங்குவோம் என முதல்வர்  பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இந்த அம்மா ஆட்சி என்ன ஆச்சுனு பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் அம்மா ஆட்சி மக்களுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

கொடநாடு கொலைகள்

kodanaadu

ஜெயலலிதா மரணத்துக்கு பின் அவரது கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதோடு தொடர்புடையவர்களின் மர்மான மரணங்களுக்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என தெஹல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணங்களை வெளியிட்டார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட ஆவணங்களில், ஜெயலலிதா மறைந்த பின்னர் கொடநாடு மாளிகையில் காவலாளி ஓம்பகதூரைக் கட்டிப்போட்டு விட்டு கொள்ளையர் உள்ளே நுழைந்தனர். ஓம்பகதூர் மர்ம மரணம் அடைந்தார். பிறகு இந்தக் கொள்ளையில் தொடர்புடைய ஷயான் காரில் பயணம் செய்தபோது மர்மமான முறையில் ஏற்பட்ட விபத்தில் அவரது மனைவி வினுப்பிரியா, குழந்தை நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். ஷயான் மட்டும் காயங்களுடன் தப்பினார். அதன் பின்னர்  கண்காணிப்புக் கேமரா ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமாக உயிரிழந்தார். இதன் பிறகு ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் கொல்லப்பட்டார். கொடநாடு மாளிகை கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்ம மரணத்தைத் தழுவியதும், ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் திட்டமிட்ட படுகொலைகள், இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கு சம்பந்தம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

கொடநாடு கொள்ளைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூலாக தெரிவித்துவிட்டு முதல்வர் பதவியில் நீடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு

thoothukudi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், தாங்கள் சுவாசிக்கும் காற்றிலும், குடிநீரிலும் ஆலையின் நச்சுக் கழிவுகள் கலப்பதால் அதனை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர். மக்களால் அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் கலவரமாக மாறியது. 2018, மே 22-ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களின் உடற்கூறாய்வு அறிக்கைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

shoot

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தலை மற்றும் மார்பு பகுதியில் சுடப்பட்டுள்ளனர். அதேபோல் சந்தேகத்திற்குரிய வகையில் சிலர் கொடூரமாக தாக்கப்பட்டும் இறந்திருக்கிறார்கள். தலையில் சுடுப்பட்டு மூளை சிதறிய சம்பவமும் நடந்திருக்கிறது. பொதுமக்கள் போராட்டத்தின் போது கலவரம் நேர்ந்தால் பின்பற்றக் கூடிய எந்த வழிமுறைகளையும் காவல்துறை பின்பற்றவில்லை. தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைப்பது, ரப்பர் குண்டுகளால் சுடுவது என மக்கள் கூட்டத்தை கலைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது. இவை எதையுமே பின்பற்றாமல் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது காவல்துறை, வேதாந்தா நிறுவனத்திடம் முதல்வர் பழனிசாமி பணம் வாங்கிவிட்டு மக்களை வதைக்கிறார் என சமூக ஆர்வலர்களை இதனை விமர்சித்தனர். இந்த கொலைகள் பற்றியும் பழனிசாமி அரசாங்கத்திடம் பதிலில்லை.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என ஆவணப்படம் வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனையும் கடந்த 20 நாட்களாக காணவில்லை.


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

rape

270-க்கும் அதிகமான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை படமாக்கி காசு பறித்த கும்பலின் பின்னணியில் அதிமுக பிரமுகர்கள் இருப்பதாக தகவல் வெளியானது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் பார் நாகராஜன் உல்லாசமாக வெளியே சுற்றித் திரிகிறான். பார் நாகராஜன் அதிமுகவில் பதவியில் இருந்தவன், இந்த பிரச்சனைக்கு பிறகு அவன் பதவி நீக்கம் செய்யப்பட்டது எல்லாம் கண்துடைப்பு போல் உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களை விட பார் நாகராஜன் மீது அரசாங்கத்துக்கு தனி அக்கறை போல, அதனால் அவனுக்கு மட்டும் பெயில் வழங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்லாது இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் சம்பந்தம் உள்ளதென தகவல்கள் வெளியானது.

pollachi admk

இதில் காவல்துறையின் செயல்பாடுகள் மெத்தனப்போக்காக இருப்பதை பார்த்தால், ஆளும்கட்சியின் தலையீடு நிச்சயமாய் இருக்கும் என்பது போல்தான் உள்ளது. டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்திய பெண்ணை காதில் அறைந்து காது கேட்காமல் செய்த எஸ்பி பாண்டியராஜன் கையில் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர், ஒரு திருமணமான பெண்ணின் வீடியோ கிடைத்துள்ளது, அவர் புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார். அதிமுக தரப்பு இதன் பின்னால் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட வேளையில், இந்த வழக்கில் எந்த அரசியல் அழுத்தமும் இல்லை என்று தெரிவித்தார். இவரது விசாரணையில் திருப்தி இல்லாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு, இறுதியாக சிபிஐ கையில் வந்து நிற்கிறது. இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விபரத்தையும் வெளியிட்டு காவல்துறை தங்கள் கோர முகத்தை காட்டியிருக்கிறது. இனி எந்த பெண்ணும் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற நோக்கத்துடனே இதை செய்ததாக தெரிகிறது.

இந்த மூன்று சம்பவங்கள் மட்டுமல்லாது 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என பல்வேறு பிரச்சனைகளும், போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நம் மீது குண்டு மழை பொழியாததுதான் குறை, கிட்டத்தட்ட போர்க்களம் போலதான் இருக்கிறது தமிழகத்தின் நிலைமை.

jj

ஜெயலலிதா போட்டோவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பாஜக ஆட்சியை வழங்குவதற்கு அம்மா ஆட்சி என பெயர் வைத்திருக்கிறது போல அதிமுக தரப்பு என பொது வெளியில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Arunpandiyan Fri, 03/15/2019 - 11:38
அதிமுக கொடநாடு கொலைகள் ஸ்டெர்லைட் படுகொலை பொள்ளாச்சில் பாலியல் விவகாரம் எடப்பாடி பழனிசாமி admk kodanad murders sterlite shootout Pollachi rape case edappadi palanisamy அதிமுகவின் அம்மா ஆட்சி தமிழகம்

English Title

kodanaadu murders, sterlite shootout, pollachi rape case; where is amma administration?!

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.