• February
    29
    Saturday

Main Area

Main



ஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்!!


ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்து ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடராக ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிவடைந்து. 

தற்போது லீட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 179 மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.  ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங்கில் வார்னர் 61 மற்றும் லபு 74 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சிற்கு முற்றிலுமாக சரணடைந்தது. வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

டெண்லி 12 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாகும். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி சோதப்பினர்.  ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹெசல்வுட் 5 விக்கெட்கள், கம்மின்ஸ் 3 மற்றும் பாட்டின்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்திருந்தது இதன் மூலம் 283 ரன்களை முன்னிலையாக கொண்டுள்ளது. தற்போது லபு 53 ரன்களுடனும், பாட்டின்சன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூன்றாவது டெஸ்டில் மூளையில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் வெளியில் அமர்த்தப்பட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. அவை அனைத்தையும் மாற்றி அமைத்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இந்திய நேரப்படி மூன்றாவது நாள் ஆட்டம் மதியம் 3.30 மணி அளவில் துவங்கும்.

2018 TopTamilNews. All rights reserved.