kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதா? தேர்தல் ஆணையம் விளக்கம் 

vote
vote
Loading...

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது போன்று சமுக வலைதளங்களில் வெளியான காட்சிகள் பொய்யானது  என தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, “நாளை மறுதினம் காலை 8மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30நிமிடத்திற்கு பின் மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பான அறையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் 2 முறை தாழிடப்பட்டு சீலிடப்படுகிறது. 

இந்த பணிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 24 மணி நேரமும் காவலுக்கு உள்ளனர். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது போன்று சமுக வலைதளங்களில் வெளியான காட்சிகள் பொய்யானது” என கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.