• October
    16
    Wednesday

Main Area

Mainரம்ஜான் என்னும் நோன்புப் பெருநாள்!

Ramzan Wishes
Ramzan Wishes

ரமலான், ரமதான் என்று அரபு வார்த்தையை அப்படியே எழுதும்போது உச்சரிப்பின் ஒலியை வாங்கி அவ்வப்போது எழுதுவதுண்டு. நம் நாட்டில் எல்லோருக்கும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் உள்ள சொல் ரம்ஜான். தேவை கருதி அப்படியே கூறுவோம்.

Eid Mubara

1400 வருடங்களுக்கு முன் சவூதி அரேபியா பாலைவனத்தில் என்ன இருந்திருக்கும்? 
ஊர் என்றால் பத்து இருபது வீடுகள், நகரம் என்றால் சில நூறு வீடுகள். அவ்வளவே.

மக்கள் தொகை? இன்று 120 கோடியாக இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 1930 களில் வெறும் 30 கோடி. இதே அளவு நிலப்பரப்பில் 1400 வருடங்களுக்கு முன் எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள்? சில லட்சங்களோ அல்லது கோடிக்கும் குறைவானவர்களோதான் இருந்திருக்கக் கூடும். 
எங்கெங்கு பார்த்தாலும் பசுமையும், வளமையும் நிரம்பி வழிந்த இந்தியாவிலேயே இத்தனை மக்கள்தான் என்ற நிலையில், வெற்றுப் பாலை நிலத்தில் எத்தனை பேர் வாழ்ந்திருப்பார்கள்?

அந்த மக்களையும் வழி நடத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் முகம்மது நபி ஸல்., அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர். பிறந்ததிலிருந்தே துன்பத்தை மட்டுமே பார்த்தவர். சொல்லாலும், செயலாலும் தன் வாழ்க்கையாலும் ஆன்மீகத்தையும், அரசியல் வாழ்க்கையையும் ஸ்தாபித்தவர். யாராலும் யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு சாதித்தவர்.

Eid Mubarak

... பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதிலிருந்து மீட்டவர்.
... சகிப்புத் தன்மை என்பதை தன் வாழ்க்கை மூலம் கற்பித்தவர்.
... வட்டியின் கொடுமை பற்றி யோசித்துப் பார்க்கக் கூட முடியாத காலத்திலேயே எடுத்துரைத்து, அதனைத் தடுக்க வேண்டும் என முழங்கியவர்.
... முதலாளித்துவமா அல்லது கம்யூனிசமா என்ற இரு துருவ பேதங்களையும் சமன் செய்யும் அளவுக்கு பொருளாதாரத்தையும், உழைப்பையும் எடுத்துக் கூறி, தன் வாழ்க்கை மூலம் விவரித்தவர்.

அந்தப் பொருளாதார சமநிலையை உலக மக்கள் அடைய வேண்டும். அதற்கு ஸகாத் எனப்படும் ஈகை அவசியம். அளந்தாவது போட வேண்டும். 
அடுத்த வீட்டில் வயிறு பசியோடு இருக்க தான் வயிறார உண்ணுதல் பாவம் என்பதை உணர வைத்து, தன் சம்பாத்தியத்தில்...கவனிக்க, ஊழல் பணத்தில் அல்ல...சம்பாத்தியத்தில், குறிப்பட்ட சதவீதத்தை மற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதைக் கடமையாக்கியவர். அதேநேரம் உழைப்பையும் வலியுறுத்தியவர்.

அந்தக் கடமை இஸ்லாமியர்களுக்கானது மட்டுமல்ல, மாறாக மொத்த மனித குலத்துக்கானது. 
ஈகை என்ற தானம் கொடுத்து மற்ற வயிறுகளின் பச்யைப் போக்க ஒருவர் முஸ்லீமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

பசி என்றால் என்னவென்று உணரவும், உடல், மன இச்சைகளை அடக்கவும், தன் வருமானத்தைச் சந்தோசமாகப் பகிர்ந்தளிக்கவும் இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உரிமையும், கடமையுமாகும். 
மதம் என்பது எதில் இருக்கிறது? பெயரிலா? இருந்துவிட்டுப் போகட்டும். 
செயலால் எல்லா மனிதர்களும் ஒன்றுதான்.

Ramzan Briyani

மனிதத்தோடு போட்டி போட்டு மதம் தோற்றுப்போய் வலுவிழக்கும் நாடு நம் இந்தியா. அதை ஒவ்வொரு விஷேச தினமும் காண்பித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இந்த ரம்ஜான் என்ற ஈகைத் திருநாள் அனைத்து மக்களுக்குமானது

தமிழில் ஈகை - அதாவது இன்முகத்தோடு கொடுத்தல். "ஃபேஸ்புக் பக்கம் போகமுடியலை, பிரியாணி கேட்டு உசுரா வாங்குறானுக" என அலுத்துக்கொண்டு பிரியாணி தரும் இஸ்லாமியர் எவருமில்லை. கொடுப்பதற்கென்றே உருவான விழா, ஈகை பெருநாள் என்பதை அறியாதவர் இஸ்லாமியரும் இல‌ர். துபாயில் இருந்தாலும் அபுதாபியில் இருந்தாலும், "பாய் பிரியாணி எங்கே" என உரிமையோடு கேட்பதிலும், மூவாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் வர்ச்சுவல் பிரியாணி தரும் இன்முகத்திலும் சிவகங்கை ஜமீன் ராஜாக்களின் முகம் பொசுங்கட்டும்! மகிழ்ச்சி பெருகட்டும். எச்சுகள் எச்சைகள். நீ வா பாய். என் பிரியாணி என் உரிமை!

- - ஃபேஸ்புக் பதிவு

2018 TopTamilNews. All rights reserved.