ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தாதீர்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தாதீர்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

EPS with PM
EPS with PM

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் டெல்டா பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

edappadi palanisamy with pm

இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழக விவசாயிகளின் நலனை காக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது. குறிப்பாக டெல்டா பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. மக்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.