darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



நித்தியானந்தா தீவு எதையும் வாங்கவில்லை... ஈகுவடார் அரசு திட்டவட்டம்!

நித்தியானந்தா
நித்தியானந்தா

எந்த செய்தியை  பார்த்தாலும் நித்தியானந்தா தான்... ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்களில்  சிக்கியுள்ள நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது தான் ஒரே கேள்வியாக உள்ளது.  

ttn

இதுவொருபுறமிருக்கத் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் நித்தியானந்தா  ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தியும் பரவலாக வலம்  வருகிறது. 

ttn

அதற்கேற்ப தென் அமெரிக்க நாட்டில் உள்ள தீவை விலைக்கு வாங்கியதாகவும்,  அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும்  இந்து மதத்தைப் பின்பற்றும்  யார் வேண்டுமானாலும்  கைலாசா  நாட்டின் குடியுரிமையைப் பெறலாம் என்றும் நித்தியானந்தா  கூறியுள்ளார். இதற்கு பாஸ்போர்ட், மொழி, இணையதளம்  உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.  இந்த அறிவிப்பானது  கேலி கிண்டலுக்கு ஆளானாலும், பலரது மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. 

ttn

இந்நிலையில் ஈகுவடாரில் நித்தியானந்தா தனிநாடு உருவாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திக்கு அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம், ' நித்தியானந்தாவுக்கு ஈகுவடாரில் அடைக்கலம் ஏதும் தரப்படவில்லை.  அவருக்கு நாங்கள்  எந்த தீவையும் விற்கவில்லை. இதுகுறித்து இணையத்தில் வெளியாகிய செய்திகள் அனைத்தும்  உண்மைக்கு புறம்பானவை' என்று கூறியுள்ளது. இதன் மூலம்  ஈகுவடாரில்  தனி நாடு என்ற கனவில் உள்ள நித்தி பக்தர்களுக்கு  வட போச்சே நிலைமை தான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். 

2018 TopTamilNews. All rights reserved.