• February
    17
    Monday

Main Area

Main



தமிழகத்தில்  விரைவில் உயர்கிறது மின் கட்டணம்! 

மின்சார கட்டணம்
மின்சார கட்டணம்

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை ஒழுங்குபடுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டுவருகிறது. ஆண்டுதோறும் மின்சார கட்டணம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அரசியல் காரணங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. 

மின்சார கட்டணம்

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளதால் அதிக மானியத்தை மின்சார வாரியம் தமிழக அரசிடம் எதிர்பார்க்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் இதனால்  விரைவில் மின் கட்டண உயர்வு குறித்த வரைவு பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட வரைவு கட்டணத்தை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வரைவு அறிக்கை வெளியானவுடன் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.