• August
    21
    Wednesday

Main Area

Main



தொப்பையைக் குறைக்கும் ஈஸியான வழி | ஸ்லீம் ப்யூட்டியாக்கும் ஃபிளாக்ஸ் சீட்ஸ் 

தொப்பை
தொப்பை
Loading...

ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர் கலந்த வெதுவெதுப்பான நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள் தொப்பை குறையும் என்று அறிவுறுத்துகின்றனர்.

belly fat

நம்ம ஊரு வெள்ளரிக்காயோட விதை, பூசணி விதையைப் போல தான் ‘ஆளி’ எனப்படும் ஃபிளாக்ஸ் விதையும்.  ஆனா இந்த விதையை அப்படியே சாப்பிடக்கூடாது. தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கறேன்னு அப்படியே சாப்பிட்டுட்டு, அப்புறம் அஜீரண கோளாறுன்னு அவஸ்தைப்படாதீங்க. ஃபிளாக்ஸ் சீட்ஸை பொடியாக்கி சாப்பிடலாம். தொப்பையைக் குறைப்பதில் இந்த விதை அதிகளவில் உபயோகமாக இருக்கும்.  எப்படி இந்த விதை தொப்பையைக் குறைக்குதுன்னு பார்க்கலாம். 

flax seeds

ஃபிளாக்ஸ் சீட்ஸில் அதிகமான அளவு நார் சத்துக்கள் இருப்பதால், இதை சரியான அளவு சாப்பிட்டால், அதிகமாக  பசி எடுக்காது. அது மட்டுமல்லாமல் உடல் எடையை கச்சிதமாக வைத்திருக்கவும். உதவும். இதிலுள்ள நார்ச்சத்து நமது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தவிர்த்து இதயநோய்,  பக்கவாதம் இதெல்லாம் வராமல் பாதுகாக்கும். ஃபிளாக்ஸ் சீட்ஸில் இருக்கும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. பசியை கட்டுப்படுத்தி நிறைவை தந்து விடுவதால், நமக்குப் பிடித்த உணவாகவே இருந்தாலும், ஒரு பிடி பிடிக்கலாம்னு எல்லாம் சாப்பிட முடியாது. 

flaxseed powder

அதிகமான தொப்பையைக் குறைக்க என்ன வழி என்று யோசித்து, உணவு கட்டுப்பாட்டில் ஒரு 10 உணவுகளை லிஸ்ட் போட்டால், அதில் நிச்சயம் ஃபிளாக் சீட்ஸ் பவுடர் இடம் பெறும். அந்தளவிற்கு இது தேவையில்லாத கெட்டக் கொழுப்பை நீக்க உதவுகிறது. `லிக்னன்ஸ்’  எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்  இதில் அதிக அளவில் உள்ளது. இது நேரடியாக உடல் எடையை குறைக்கத் துணை புரியா விட்டாலும், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணை புரிகிறது.  தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடரைக் கலந்து குடித்து வாருங்கள். இதைக் குடித்த பின்னர் அடுத்த அரை ம நி நேரத்திற்கு வேறு எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது. டீ, காபி எல்லாம் அடுத்த அரை மணி நேரம் கழித்து தான். அப்புறம் பாருங்க... ஒரே வாரத்துல உங்க தொப்பையோட சைஸ் எப்படி குறைய ஆரம்பிக்குது என்று.

2018 TopTamilNews. All rights reserved.