• November
    21
    Thursday

Main Area

Main



டெங்குவால் உயிரிழப்புகள் இல்லை எனக் கூறிய அமைச்சருக்கு துரைமுருகன் பதிலடி..!

Durai murugan
Durai murugan

தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவுவதைத் தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் டெங்குகாய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறியிருந்தார். 

Duraimurugan

இந்த நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர்  துரைமுருகன், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெரும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் பரவுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த துரைமுருகன் , தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் விரைவாகப் பரவி வருகிறது, அதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் இல்லை என்று கூறும் அமைச்சர் விஜய பாஸ்கர் தினந்தோறும் செய்தித்தாள் படிக்கிறாரா, இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், தமிழக முதல்வருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவருக்கெல்லாம் எதற்கு டாக்டர் பட்டம் அளித்தார்கள் என்று துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.