• April
    04
    Saturday

Main Area

Main



கள்ளக்காதல் விவகாரம்: தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை

Driver maarimuthu
Driver maarimuthu

கிருஷ்ணகிரியிலுள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் வேன் டிரைவராக வேலை செய்துவருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அதே பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் தீர்த்த செல்வன் என்பவரது மனைவி ஈஸ்வரியுடன் மாரிமுத்துவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஈஸ்வரியின் கணவர் தீர்த்த செல்வன், மாரிமுத்துவை கண்டித்துள்ளார். ஆனாலும் மாரிமுத்து தொடர்ந்து ஈஸ்வரியுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீர்த்த செல்வன், தனது நண்பர் கோவிந்தராஜுடன் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டார். 

Murder

இதையடுத்து கோவிந்தராஜ், மது போதையில் ஏரிக்கரை என்ற பகுதியில் இருந்த மாரிமுத்துவின் தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிரு‌‌ஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் நடைபெற்ற விசாரணையையடுத்து மாரிமுத்துவின் கொலையில் தொடர்புடைய ராணுவ வீரர் தீர்த்த செல்வன், அவரது நண்பர் கோவிந்தராஜ், கேசவன் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.