• August
    26
    Monday

Main Area

Main



வரிக்குதிரை தோல் போர்த்திய கழுதை!

Donkeys as Zebras
Donkeys as Zebras
Loading...

ஸ்பெயின், காடிஸ் நகரத்தின் புறநகர் ஏரியாவில் எப்போதும் கழுதைகள் மேய்ந்து திரிவதுண்டு. சில நாட்களுக்கு முன்னர் வழக்கமான‌ கழுதைகளோடு கூடவே சில வரிக்குதிரைகளும் நிற்பதைக்கண்ட உள்ளூர்க்காரர்களுக்கு ஆச்சர்யம். கழுதை குட்டிப்போட்டா வரிக்குதிரை வருமா? அதுவும் இவ்வளவு பெரிய குட்டியாக போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என ஆச்சர்யத்தில் மூழ்க, ஒருசிலர் மட்டும் வரிக்குதிரைகளுக்கு அருகே சென்றுப்பார்த்தால், அவை அங்கே வழக்கமாக  மேயும் கழுதைகள்தான்.

Donkeys painted as Zebras

விலங்குகள் நல ஆர்வலர்கள்மூலம் விஷயம் போலிஸ் கவனத்துக்கு சென்றது. அவர்களின் விசாரணையில், சமீபத்தில் உள்ளூரில் நடந்த திருமணம் ஒன்று நடந்தது தெரியவந்தது. காட்டில் வனவிலங்குகள் இடையே தங்கள் திருமணம் நடக்கவேண்டும் என்ற ஆசை மணமக்களுக்கு. காட்டுக்கு செல்ல வாய்ப்பில்லை, எனவே, நகரில் சுற்றித்திரிந்த கழுதைகளைப் பிடித்து வரிக்குதிரைகள் போல பெய்ண்ட் அடித்து, பேக்ரவுண்டில் அலையவிட்டு, திருமணத்தை நடத்தி போட்டோ எடுத்திருக்கிறார்கள். ஆசை இருக்காம் அரசாள, அதிருஷ்டம் இருக்காம் ஆடு மேய்க்க.

2018 TopTamilNews. All rights reserved.