kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பாண்டிச்சேரி ஃபர்னிச்சர்! நிஜமா...பித்தலாட்டமா…!

பாண்டிச்சேரி ஃபர்னிச்சர்
பாண்டிச்சேரி ஃபர்னிச்சர்
Loading...

சென்னையிலிருந்து பாண்டிசேரிக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் போகும் போது,ஊருக்கு பத்து கிலோ மீட்டர் முன்பே சாலயின் இருபுறமும் பழம் பொருட்கள் விற்கும் கடைகள் வரிசைகட்ட  துவங்கி விடுகின்றன.வீட்டின் வாசலில் போட்டிருந்த மிதியடி முதல் கூரையில் வேய்ந்திருந்த ஓடுகள் வரை குவித்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

கொஞ்சம் கவனமாக பார்த்தால்,இந்தக் கடைகளில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன என்பது புரியும்.முதல் பிரிவு -இப்படி ஓடு,உத்திரம் ,தூண்கள்,நிலை கதவுகள், பழைய புகைப்படிந்த மர அலமாரி ,கட்டில்,காலொடிந்த மேஜை நாற்காலி என்று குவித்து வைக்கப்பட்டு இருப்பவை.இதற்கு நிறைய இடம் வேண்டும் என்பதால் இவை பெருமளவில் ஊருக்கு வெளியில்தான் அமைந்துள்ளன.

jjvdsDF

அடுத்தது,இப்படி இடிக்கப்பட்ட வீட்டில்,பிரிக்கப்பட்ட அலமாரிகளில் இருந்த வீட்டு உபகரணங்கள் விற்கப்படும் ஆண்டிக் ஷாப்புகள்.இங்கே பழைய பீங்கான் தட்டுகள்,குவளைகள்,குத்துவிளக்கு,வெங்கலக்கும்பா,முதல் அந்தக்கால ஊசிமணி பாசிமணிகூட விற்கப்படுகின்றன.இந்த இரண்டு கடைகளில்  விற்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் உண்மையான பழம் பொருட்கள்தான்.

ஆனால்,பாண்டியில் ஆங்காங்கே ஆண்டிக் ஃபர்னிச்சர் கடைகள் நிறைய வந்துவிட்டன.அங்கிருக்கும் கடைகளில் வைத்திருக்கும் கட்டில்கள், மேஜைகள், டைனிங் டேபிள்கள்,கார்னர் ஸ்டாண்டுகள் எல்லாம் பார்த்தால் ஃபிரஞ்சுக்காரர்கள் காலத்திய பாண்டிச்சேரி, இன்றைய பாண்டிச்சேரியைவிட பெரிதாக இருந்திருக்க வேண்டும்!

மக்கள் செல்வத்தில் புரண்டு தேக்கு கட்டில்கள்,மகோகனி ஃபர்னிச்சர்கள், கருங்காலி கைத்தடிகள் என்று அசல் ஃபிரஞ்சுக்காரனை போலவே வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால்,துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளையும்,பிரபஞ்சனும் சொல்லியிருக்கும் பழைய பாண்டிச்சேரி வரலாறு அப்படி இல்லை.ஆனால்,இந்த ஆண்டிக் ஃபர்னிச்சர் கடைகளில் இருக்கும் பொருட்கள் எப்படி கிடைத்தன?

dsVV

புதிதாகச் செய்து,பழையது என்று சொல்லி விற்கிறார்களா,என்றால் இல்லை.அந்த நாற்காலிகளும் மேஜைகளும் மிகப்பழைமையான மரத்தால் ஆனவைதான்.இது எப்படி?இதற்கு பதில் தேட நீங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.அந்த பழைய நிலைகள், கதவுகள் எல்லாம் வாங்கிப்  பயன்படுத்த நினைத்தால் அதே பானியிலான வீடுகள் கட்டவேண்டும்.

இன்று கட்டப்படும் முக்காலடி கனமுள்ள செங்கல் சுவர்களில் அந்த எட்டடி உயர நிலையையும்,ஏழடி உயரமும் நான்கடி அகலமும் கொண்ட கதவையும் பொருத்தினால் சுவரே சாய்ந்து விடாதா? அடுத்தது தேக்குமர உத்திரங்களும், கோங்கு,மருத மரத்தூண்களுக்கும் நவீன வீடுகளில் இடம்  எங்கே இருக்கிறது! 

இங்கேதான் புதுச்சேரி காரர்களின் புத்தம்புதிய ஐடியா நுழைந்திருக்கிறது.அந்த பழைய மரச்சாமான்களை வாங்கி அறுத்தும் இழைத்தும் பலகைகளாகவும், சட்டங்களாகவும் மாற்றி,அந்தக்காலத்து ஸ்டைலில் மேஜைகள் நாற்காலிகள், கட்டில்கள் என்று புதிதாக செய்து சிறப்பாக பாலிஷ் போட்டு நல்ல விலைக்கு விற்கிறார்கள்.ஆண்டிக் என்று அவர்கள் சொல்வது முழுவதும் பொய் அல்ல,மரம் ஐம்பதாண்டு அறுபதாண்டு,ஏன் நூறாண்டு பழைமையானதாககூட இருக்கலாம்.

zzdfgdg

ஒரு காலத்தில் உத்திரமாக இருந்துவிட்டு இன்று அதுவே சொகுசான சாய்வு நாற்காலியாக மாறி இருக்கலாம்,அவளவுதான்.இதில் இன்னும் சில நல்ல விசயங்கள் இருக்கின்றன.பழைய மரங்களுக்கு நல்ல விலை கிடைப்பதோடு, தொழில் நுட்ப அறிவுக்காக வயதான தச்சர்களை தேடிப்பிடித்து இன்றைய இளைஞர்களுக்கு பாரம்பரிய அறிவை பகிர்கிறார்கள்.ரீசைக்ளிங்கில் ஒரு புதிய வரவேற்கப்பட வேண்டிய ட்ரெண்ட் இது.

இதையும் வாசிங்க

சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..

2018 TopTamilNews. All rights reserved.