• November
    18
    Monday

Main Area

Main



தீபாவளி சிறப்பு ரயில் எங்கிருந்து எத்தனை மணிக்கு புறப்படுதுன்னு தெரிஞ்சுக்கணுமா...

Train
Train

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் மக்கள் ஆரவாரமாக தீபாவளி பண்டிகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளியூரில் தங்கி பணிபுரியும் மக்களும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர். தீபாவளிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், சிறப்பு ரயில்களின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளது.  

Train

தீபாவளி சிறப்பு ரயில்கள்:

1.    வண்டி எண் 06027 திருச்சிராப்பள்ளி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 26.10.2019 அன்று மதியம் 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  

2.    வண்டி எண் 82644 நாகர்கோவில் - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து 29.10.2019 அன்று நண்பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 02.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  

Train

 

3.    வண்டி எண் 82605 தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து 24.10.2019 அன்று இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
வண்டி எண் 82606 திருநெல்வேலி - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து 28.10.2019 அன்று இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.  

4.    வண்டி எண் 06006 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து 25.10.2019 அன்று இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
வண்டி எண் 06005 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து 26.10.2019 அன்று இரவு 07.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில்கள் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2018 TopTamilNews. All rights reserved.