kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஓணம் பண்டிகையை ஏன், எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா? 10 நாள் திருவிழா!

ஓணம்
ஓணம்
Loading...

ஓணம் பண்டிகையை ஏதோ கேரளாவில் விசேஷமாக கொண்டாடுகிற பண்டிகையாக மட்டும் தான் நாமெல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால், ஓணம் பண்டிகை ஏன், எப்படி கொண்டாடப்படுகிறது என்கிற விவரங்களை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா... அந்த பண்டிகை சொல்லிக் கொடுக்கிற வாழ்வியல் விஷயங்கள் அத்தனை மகத்துவமானதுன்னு புரிஞ்சுப்பீங்க!

onam

அரக்கனாக பிறந்திருந்தாலும், தன்னோடைய நாட்டு மக்கள் அனைவருமே விரும்பும் அரசனாக, பல தான தர்மங்கள் செய்து தேவர்கள் அளவிற்கு உயர்ந்து நிற்க நினைத்த மகாபலி சக்கரவர்த்தியோடைய செருக்கை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்து, மகாபலியிடம் 3 அடிகளை தானமாகக் கேட்டு நின்றார் கடவுள். 

onam

தன்னிடம் யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லியே பழக்கம் இல்லாத அரசனான மகாபலி, கேட்டது கேட்டாய் அதிகமாகவே கேட்கலாமே மூன்று அடிகள் போதுமா என்று அப்போதும் பவ்யம் காட்டி குழம்பி நின்றான். 3 அடிகள் போதும் என்ற இறைவன், மகாபலி கொடுக்க சம்மதித்ததும், தன்னுடைய உருவத்தைப் பெரிதாக்கி ஒரு அடியால் மண்ணுலகு முழுவதையும் அளந்து விட்டு, மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்துப் பார்த்து, 3வது அடி எங்கு வைப்பது மகாபலி என்று ஏளனச் சிரிப்புடன் மகாபலியைப் பார்த்து நின்றார்.
தன்னுடைய மகுடத்தை கழற்றி, குனிந்து வணங்கினான் மகாபலி. இதோ என் ஆணவத்தையும், மகுடத்தையும் கழற்றி எரிந்து விட்டேன். என்னுடைய தலை மீது தாங்கள் இப்போது தங்களின் மூன்றாவது அடியை வைக்கலாம்’ என்று கூறினான்.

அரக்கனாகவே இருந்தாலும், மகாபலியின் வார்த்தை நேர்மையும், பக்தியும் பெரிது. மிகச்சிறந்த அரசனான மகாபலியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என இறைவன் கேட்க, ‘என் நாட்டு மக்கள் மீது நான் அளவற்ற அன்பு வைத்துள்ளேன். இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும். அதனால், நான் ஆண்டு தோறும் என் மக்களை வந்து பார்த்து, அவர்கள் எப்படி செழிப்பாக இருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என பார்த்து மகிழ இந்த பூலோகம் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ என கேட்டான். திருமால் அளித்த அந்த வரத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் திருவோணம் நட்சத்திரத்தில் மகாபலி தன் மக்களை வந்து பார்க்க வருவதாகப் புராண கதை கூறுகின்றது. இப்படி புராணங்கள் சொல்கிற கதையாகவே இருந்தாலும், கிபி 861 தேதியிட்டு கிடைத்த தாமிர தகட்டின் அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த திருவிழா மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

onam

கேரள மக்கள் கொண்டாடி வரும் திருவிழாக்களில் மிக முக்கியமானது ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. 
இந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம்.  அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். 4வது நட்சத்திரமான விசாகத்தில் ஒன்பது சுவை உணவுகளை தயார் செய்து உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி உண்டு மகிழ்கின்றனர். குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகைகள் இந்த பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். இந்த உணவை சாத்யா என அழைக்கின்றனர். அனுஷன் எனும் 5ம் நாள் அனிளம் என அழைக்கின்றனர். இந்த நாளில் பாரம்பரிய படகுப் போட்டி நடத்தப்படுகின்றது. இந்த படகுப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு எனும் பாடலைப் பாடிக் கொண்டே உற்சாகத்துடன் படகை விரைவாக செலுத்துவது வழக்கம். 
ஆறாவது நாளில் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், 8வது நாள் பூராடம், அடுத்து உத்திராடம் என அழைக்கப்படுவதோடு, 10ம் நாள் திருவோணம் என மிகச் சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. 10வது நாளில் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் பண்டிகை வண்ண அத்தப் பூக்களால் கோலம் போட்டு தொடங்கப்படுவது வழக்கம். 
இந்த 10 நாட்களிலும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மக்கள் அத்தப்பூ கோலமிட்டு வீட்டைப் பொழிவாக வைப்பது வழக்கம்.

2018 TopTamilNews. All rights reserved.