• October
    16
    Wednesday

Main Area

Main



தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தென்காசியில் வெற்றி பெற்ற திமுக

DMK Congress interesting data
DMK Congress interesting data

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகத்தில் பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்குப் பின் சில சுவாரசியமான வரலாறுகளும் உண்டு. இத்தனை வருட திமுக நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில், அக்கட்சி தென்காசியில் மட்டும் வெற்றி பெற்றதே இல்லை. முதன்முறையாக அக்கட்சியின்  தனுஷ் குமார், அதிமுவைவிட ஒரு லட்சத்து 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த கிருஷ்ணகிரி தொகுதியை, கடைசியாக தமிழ் மாநில காங்கிரஸ் 1996ஆம் ஆண்டு வென்றது. அதன்பின், 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது காங்கிரஸின் செல்லக்குமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.

சேலத்தை கடைசியாக வெற்றியுடன் திமுக பார்த்தது 1980ஆம் ஆண்டு தேர்தலில். அதன்பிறகு 39 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்போது எஸ்.ஆர். பார்த்திபன் திமுகவுக்கு சேலத்தை மீட்டெடுத்திருக்கிறார் ஒரு லட்சத்து 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று.

பொள்ளாச்சி தொகுதியை 1980ஆம் ஆண்டு தண்டபானி வென்றதுதான் திமுகவுக்கு அங்கே கடைசியாக கிடைத்த வெற்றி. அதன்பின், இப்போது திமுகவின் சண்முகசுந்தரம் 5 லட்சத்து 50,000 வாக்குகள் பெற்று 39 வருட சோகத்தை நிறுத்தியிருக்கிறார். இதேப்போல், திண்டுக்கல் தொகுதியும் கடைசியாக 1980ல் திமுக வசம். அதன்பின் இப்போது வேலுச்சாமி 5 லட்சத்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவை தோற்கடித்து திமுகவுக்கு வெற்றிக்கனியை சமர்ப்பித்திருக்கிறார்.

DMK Congress winning history

திருச்சி கடைசியாக காங்கிரஸ் வசம் இருந்தது 1996ல் தமிழ் மாநில காங்கிரஸாக இருந்தபோது. இப்போது திருநாவுக்கரசர் ஆறு லட்சத்து 21,285 வாக்குகள் பெற்று திருச்சியை மீட்டெடுத்திருக்கிறார்.

மயிலாடுதுறையில் கடைசியாக திமுக வென்றது 1971ல். இப்போது திமுகவின் ராமலிங்கம் அதிமுகவைவிட 2 லட்சத்து 61ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 48 வருடங்களுக்குப் பிறகு மயிலாடுதுறையில் திமுக கொடி பறக்க விடுகிறார்

2018 TopTamilNews. All rights reserved.