kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


மாநில கட்சி அந்தஸ்தை இழக்கிறது தேமுதிக! கட்சி ரத்தாக வாய்ப்பா?

dmdk
dmdk
Loading...

தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டது. 4 தொகுதிகளிலும் சொல்லமுடியாத அளவிற்கு சொற்ப்பமான வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது. 

கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷ் 3 லட்சத்து 21, 794 ஓட்டுகளும், விருதுநகரில் போட்டியிட்ட அழகர்சாமிக்கு 3 லட்சத்து 16,329 ஓட்டுகளும், வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட மோகன்ராஜ் ஒரு லட்சத்து 29,468 ஓட்டுகளும், திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன் ஒரு லட்சத்து 61,999 ஓட்டுகளும் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளனர்.  வலுவான கூட்டணியில் இருந்தும் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெற்றிப்பெறாதது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தோல்வியின் ஏக்கத்தால் அதிருப்தியில் உள்ளானர். கடந்த 2009 ஆண்டு 10.1 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் தற்போது 2.19 ஆக சரிந்துள்ளது.

ஒரு கட்சி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற 6 சதவீத வாக்குகளை பெற வேண்டும். ஆனால் அதற்கும் குறைவான வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அந்தஸ்திலிருந்து தேமுதிக நழுவுகிறது. இதனால் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது என்றும், முரசு சின்னம் இனி அந்த கட்சிக்கு கிடைக்காது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.