• November
    18
    Monday

Main Area

Main



தீபாவளி பலகாரங்கள்: வரகரிசி தட்டை

தட்டை
தட்டை

தேவையான பொருட்கள்


வரகரிசி - 400கி
பொட்டுக்கடலை மாவு - 100கி
உளுந்த மாவு - 1டேபிள்  ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காய தூள் - 1சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

தட்டை


செய்முறை


பொட்டுக்கடலையை மிக்ஸியில் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்து வைத்த பொட்டுக்கடலையை  சலித்து கால் கப் எடுத்துக் கொள்ளுங்கள். கடலைபருப்பை நன்கு கழுவி, ஊற வைக்க வேண்டும். வரகரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஊற வைத்த கடலைப்பருப்பை சேர்க்க வேண்டும். பொட்டுக்கடலை மாவு, உளுந்த மாவு, காய வைத்த எண்ணெய்  1டேபிள் ஸ்பூன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை பச்சையாக கிள்ளிப் போட்டு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
சப்பாத்தி பதத்தில் வருகிற இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழையிலையில் எண்ணெய் தடவி சிறு சிறு சிறு தட்டைகளாக தட்ட வேண்டும். பால் பாக்கெட் கவர்களைப் பயன்படுத்தலாம்.  எண்ணெயை காய வைத்து தட்டைகளைப் போட்டு திருப்பி விட்டு வேகவைத்து சலசலப்பு அடங்கியதும் எடுக்க வேண்டும். பொரித்த வரகரிசியின் சுவையான இந்த தட்டை தீபாவளியை ஸ்பெஷலாக்கி விடும்.

2018 TopTamilNews. All rights reserved.