• February
    22
    Saturday

Main Area

Main



தீபாவளி பலகாரங்கள்: இனிப்பு சீடை

சீடை
சீடை

தேவையான பொருட்கள்
பச்சரிசி         -500கிராம்
வெல்லம்       -300கிராம்
வெள்ளை எள்   -1டீஸ்பூன்
தேங்காய் துருவல்-1/2மூடி

seedai
செய்முறை
பச்சரிசியை நன்றாக கழுவி 15நிமிடம் ஊற வைத்து காய வைக்க வேண்டும். காய்ந்த பிறகு பச்சரிசியை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். இப்போது வெல்லத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து நன்கு கரைந்ததும் அந்த கரைசலை வடிகட்டி இறக்கிக் கொள்ளா வேண்டும். சூடு ஆறியதும் இறுகி விடும். இப்போது இந்த வெல்லப் பாகை சலித்த மாவில் ஊற்றி அதனுடன் எள், லேசாக வதக்கிய தேங்காய் துருவலைப் போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
சீடைக்காக மாவை உருட்டும் போது, மிகவும் அழுத்தி உருட்டாமல் மென்மையாக உருட்டிப் போட வேண்டும். அப்போது தான் சீடை பொரிக்கும் போது வெடிக்காமல் இருக்கும். நன்றாகவும் வேகும்.

2018 TopTamilNews. All rights reserved.