• August
    24
    Saturday

Main Areaமரக்கூண்டு சிறை

குற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை!

சிவில், கிரிமினல் வழக்குகள் கூட இந்த பஞ்சாயத்துகளில் தீர்க்கப்படுகின்றன. அங்கே காவல் துறைக்கு அதிக வேலை இல்லையாம்


humansacrifice

மகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி

தன்னுடைய கோயிலுக்கு நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியது அதிர்ச்சியடைய செய்துள்ளது


காதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்

காதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்

கவியழகுக்கே பேர் போன மகாகவி காளிதாசன் தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

kalidasa

 " காளிதாசன்... கண்ணதாசன் கவிதை நீ" என்று சினிமா பாடல் வரிகள் கூட அவரின் புகழைத் தான் பறைசாற்றுகிறது. அப்படிப்பட்ட காளிதாசனின் படைப்பு கதாபாத்திரங்களை தன் அழகிய ஓவியத் திறமையால் வடித்துள்ளார்.

kalidasan

டாக்டர் பாரதி ஜெயின் இதில் நாட்டம் கொண்டு ஈடுபட்டுள்ளார். காளிதாசனின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழப் பார்த்து இந்த ஓவியத்தை தீட்டியுள்ளார். இந்த ஓவியம் ஆல்கபூரி, ஹஸ்தினாபூர் மற்றும் ஹிமாலய கற்பனை உலகின் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓவியம் மிகவும் நேர்த்தியாகவும் வெளிப்படையாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.

kalidasa 1

மேலும் இவருடைய படைப்புகள் காளிதாசனின் வெவ்வேறு கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டவையாக உள்ளது. அபிக்ஞான சகுந்தலம், குமாரசம்பவம், மேகதூதம் போன்ற காளிதாசனின் படைப்புகளை தேர்ந்தெடுத்து அதில் வரும் கதாபாத்திரங்களை தன் ஓவியமாக தீட்டியுள்ளார். சகுந்தலா, ஷங்கர், பார்வதி, யாக்ஷா போன்ற கதாபாத்திரங்களை நவீன கால ஓவிய தீட்டலில் தீட்டி தன் திறமையை காட்டியுள்ளார்.

kalidasa 2

இயற்கையான சூழலில் பறந்து வரும் பட்டாம்பூச்சி நிறங்களும், இசைத்து வரும் பறவைகளின் நிறங்களையும் பார்ப்பது போன்று தான் இந்த வண்ணமயும் ஓவியம் அமைந்துள்ளது. ஏன் என்றால் காதல், காமத்தை காளிதாசரை விட அழுத்தமாக வேறு யாரால் சொல்லிவிட முடியும் என்பதற்காகத் தான் இந்த பிராட் கலர்கள்.

kalidasa

பாரதியின் ஓவியம் கலை அருங்காட்சியகத்தில் தனி இடத்தை பெற்றுள்ளது. அதிலும் அவர் தீட்டியுள்ள ஓவியத்தில் இடம்பெற்றுள்ள இளஞ்சிவப்பு, தங்க நிறம், சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பகுதிகள் என்று பார்க்கும் போதே ஓவியத்தின் நிஜ அழகை பரிசாக்குகின்றன. அப்படியே இயற்கையின் மடியில் நின்று ஏராளமான இலைகள் காற்றுடன் தவழும் விதத்தில், காற்றை துளையிடுவது போன்று பார்வையாளர்களின் மனத்தை துளையிட்டு செல்கிறது.

newsdesk Mon, 01/28/2019 - 12:25
Kalidasa kalidasa poems kalidasan love songs Sanskrit writer poet kalidasa சுற்றுலா டிஸ்கவர் இந்தியா

English Title

love and Kalidasa poems

News Order

0 என்னா அலும்பு!... கோவையை தெறிக்கவிட்ட யானை 'சின்னத்தம்பி'யின் இன்னிங்ஸ் முடிந்தது

கோவை: கோவையை ஒட்டிய வனப்பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை திகிலூட்டி வந்த காட்டு யானை தீவிர முயற்சிக்குப் பின் பிடிபட்டது. 

கோவை அருகே தடாகம், நஞ்சுண்டபுரம் போன்ற கிராமங்களுக்குள் சில மாதங்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு விளைநிலங்களை அழிப்பது, ஊர் மக்களை அச்சுறுத்துவது என அட்டகாசம் செய்து வந்தன. பின்னர் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டு அவ்வப்போது வந்து அட்டூழியம் செய்தன. 

elephan

அதனால் வனத்துறையினரோ, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று எண்ணி இந்த யானைகளை பிடிக்க திட்டமிட்டனர். ஆனால் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இந்த 2 யானைகள் மீது கிராம மக்களுக்கு கொஞ்ச நாளிலேயே பாசம் அதிகமாகிவிட்டது. அதனால் விநாயகா, சின்னதம்பி என்று இந்த யானைகளுக்கு பெயரையும் சூட்டி அழைத்து வந்தார்கள்.

ele

இதில் வினாயகா ரொம்ப சாதுவான டைப். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராது. ஆனால் சின்னதம்பியோ எமகாதகன்! பயங்கர சேட்டை... எதற்கும் அடிபணியாமல் எல்லாரையும் தெறிக்க விட்டுவிடும்.

elephantt

இந்நிலையில் கடந்த மாதம், சாதுவான விநாயகாவை முதலில் பிடிக்கலாம் என திட்டமிட்ட வனத்துறையினர் விஜய், மற்றும் கலீம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். "ஆபரேஷன் விநாயக்" என்று ஒரு பெயரையும் சூட்டி, விநாயகாவை பிடித்துக் கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டார்கள். அப்போது கிராம மக்கள் விநாயகாவுக்கு மிகுந்த சோகத்துடன் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பியனுப்பினர். 

wild

அடுத்ததாக சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு வந்தார்கள். இதற்காக விநாயகாவை பிடிக்க உதவிய அதே 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு நாள் ஆட்டம் போட்டு வந்த சின்னதம்பி ஒருவழியாக  மயக்க ஊசியும் செலுத்தப்பட்டு பிடிபட்டது.  மயக்கம் தெளிந்ததும் அந்த யானையை முதுமலை காட்டுக்குள் சென்று விட்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

yaanai

இனி சின்னதம்பிக்கும் கழுத்தில் ரேடியோ காலர் ஐடி கட்டிவிடுவார்கள். இப்படி காலர் ஐடி கட்டிவிட்டால், யானை எந்த பகுதிக்கு தவறி சென்றுவிட்டாலும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மீண்டும் வந்து வாலாட்ட முடியாது. அதனால் சின்னதம்பிக்கும் காலர் ஐடியை கட்டி முதுமலையில் கொண்டு போய் விட வேலைகள் நடந்து வருகிறது.

vikrammuthu Fri, 01/25/2019 - 11:09
wild elephant coimbatore elephant டிஸ்கவர் இந்தியா

English Title

wild elephant chinna thambi caught by foresters

News Order

0 
'டீ பார்ட்டி'யை கேள்விப்பட்டிருப்பீர்கள்! 'டீ பாட்டி'ன்னா தெரியுமா? 30 ஆண்டுகளாக 'டீ' மட்டுமே அவருக்கு உணவு

கொரியா(சத்தீஸ்கர்) வழக்கமாக காலை, மாலையில் டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். குளிர் காலங்களில் கூடுதலாக ஒரு கப். ஆனால் 30 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் ஒரு பெண் இந்தியாவில் இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி பில்லி தேவி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர்வாழ்ந்து வருகிறார். கொரியாவில் 'சாய் வாலி சாச்சி' என நண்டு சிண்டுகளைக் கேட்டாலும் இவரிடம் கூட்டிச் செல்வார்கள். அனைவராலும் செல்லமாக அவ்வாறு அழைக்கப்படும் பில்லி தேவி தான் இந்த விசித்திரமான பெண். இவரிடம் பேசினால் டீ பார்ட்டி கேள்விப்பட்டிருக்கோம் இப்பத்தான் டீ பாட்டியை பார்க்கிறோம் என நினைக்கத் தோன்றும்.

கொரியா மாவட்டம் பாரதியா கிராமத்தை சேர்ந்த பில்லி தேவி, தனது 11-வது வயதில் இருந்து தேநீர் தவிர்து மற்ற ஆகாரத்தை எடுத்துக்கொள்வதை கைவிட்டுள்ளார். இதுகுறித்து பில்லி தேவியில் தந்தை ரதி ராம் கூறியதாவது: பில்லி தேதி அவரது 6-ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய பில்லிதேவி எதுவும் சாப்பிடாமல் படுத்துவிட்டார். மறுநாளில் இருந்து திட உணவு, தண்ணீர் சாப்பிடுவதில்லை. தந்தாலும் மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் சில ரொட்டி துண்டுகள், பால் எடுத்துக்கொண்ட பில்லி தேவி பின்னர் அதையும் ஒதுக்கி விட்டார். சில மாதங்களிலேயே கருப்பட்டி டீ  மட்டும் அருந்துவதை வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.

இது பற்றி பயந்து போன நாங்கள் மருத்துவர்களை அனுகினோம். பில்லி தேவிக்கு எந்தக் குறைபாடோ, நோயா இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்றார். இதுநாள் வரை டீ மட்டும் உட்கொண்டு ஆரோக்கியமாக, நோய் இன்றி வாழ்ந்து வரும் பில்லி தேவியை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தீவிர சிவ பக்தையான பில்லி தேவி, இறை வழிபாடு, டீ என ஒரு சிறு வட்டத்துக்குள் தனது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு வாழ்கிறார். 

sanjeevravichandran Tue, 01/22/2019 - 16:14
chandigarh chai சுற்றுலா டிஸ்கவர் இந்தியா

English Title

tea paaty billy devi from chandigarh women

News Order

0 மண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த நூற்றாண்டு வரை இளவேலங்கால் என்றழைக்கப்படும் இளவட்டக் கல் தூக்கும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது .

ilavattakal

இவற்றை தூக்கினால்தான்  திருமணத்துக்கு பெண் கொடுப்பார்கள் என்கிற வழக்கமும் அந்த காலத்தில் இருந்துள்ளது.

இதனால் இதற்கு கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. இந்த கல் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும் முழு உருண்டையாக வழவழவென்று எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருக்கும். இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. 

முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும்.

ilavattakal

தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்து கல்லோடு கோயிலை வலம் வருவது குளத்தை வலம் வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.

புதுமாப்பிள்ளைகளுக்கு கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் பண்டைய காலத்தில்  நடைமுறையில் இருந்ததாம்.

தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கல் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.

ilavattakal

உடல் வலிமைக்கு சாட்சியாகத் திகழும் இளவட்டக் கல் தூக்கும் நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது .

நாகரீக காலத்தில் இந்த வழக்கம் மறைந்து விட்டாலும் தென் மாவட்டங்களில் இன்னும் சில ஊர்களில் இளவட்டக் கல் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது .

இந்த இளவட்ட கல் தூக்கும் போட்டியில் வென்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. 
 

vijay Thu, 01/03/2019 - 15:53
pongal festival games outdoor games list heroic games pongal games ilavatta kal spiritual ilavattakal சுற்றுலா டிஸ்கவர் இந்தியா

English Title

heroic games Buried in the soil 

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.