• August
    26
    Monday

Main Area

Main



கே.எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல்!

KS Ravikumar
KS Ravikumar
Loading...

பி.வாசு, ஜனநாதன், கே.எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்படி 2019 - 2021 ஆம் ஆண்டுக்கு தேர்தல் நடத்துவதற்கான முடிவு சங்கத்தின் 99-வது பொதுக் குழுவில் எடுக்கப்பட்டது. இதில் ஒருமனதாக பாரதிராஜா அண்மையில் இயக்குநர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாரதிராஜா அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளாததை அடுத்து தலைவர் பதவிக்கும் வரும் 21ல் தேர்தல் நடக்கவுள்ளது. தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில் இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட பி.வாசு, ஜனநாதன், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே. செல்வமணி, அமீர் ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.  நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.