• December
    06
    Friday

Main Area

Mainகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே?லாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது! அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்

லாஸ்லியா
லாஸ்லியா

ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதே போட்டியின் முதல் டாஸ்க். அந்த விஷயத்தில் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி மலர்வது வழக்கம். அந்த வகையில் தற்போதைய சீசனில் காதல் ஜோடியாக உலாவருவது லாஸ்லியா, கவின் ஜோடி.. 

vasanta balan

இந்நிலையில் நேற்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். அப்போது லாஸ்லியாவின் தந்தை,  உன்ன அப்படியா வளர்த்தேன் நான். நான் அப்படி வளர்க்கல, என்ன சொல்லி வந்த உள்ளே; கண்டவன் காறித்துப்புறதை நான் பார்க்கவா' என்று திட்டி தீர்த்தார். இதைக்கண்ட கவின் அழுதுகொண்டு லாஸ்லியா குடும்பத்தினரிடம் பேசாமல் அமைதியாக இருந்தார். இதை ஒரு கேம் என நினைத்து விளையாடிவிட்டு வெளியே வருமாறு லாஸ்லியாவின் குடும்பத்தினர் லாஸ்லியாவுக்கு அறிவுரை கூறினர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் காதல் குறித்தும் நேற்றைய நிகழ்ச்சி குறித்தும் பிரபல இயக்குநர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

los

இதுகுறித்து இயக்குநர் வசந்த பாலன் அவருடைய பேஸ்புக் பக்கத்தில், “ கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி Pearle Maaney மற்றும் சின்னத்திரை நடிகர் Srinish Aravind கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள்.நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய,கொண்டாடிய தருணங்களை பார்கையில்,எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல்.பார்க்க பார்க்க தித்திக்கும் காதல்.  ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா,கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே “லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?...கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது.முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.

இன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. ”வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே? என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள்,லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள். லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். ஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான்.சியர்ஸ்.... அவரும் மகளின் காதலை விரும்பவில்லை.
உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார். என்ன மகளே! கையில வேர்க்கிது? என்று கேட்க ’சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றாள் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.

Losliya kavin

ஆக தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாக தான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய? அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது.” எனக்கூறினார். 
 

2018 TopTamilNews. All rights reserved.