• October
    21
    Monday

Main Area

Main



ஒரே நாளில் ஆவின் பாலை விட அதிக பிரபலமடைந்த அமலா பால்...

 அமலாபால்
அமலாபால்

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக குடிநீர்ப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்ட டாபிக் பால், அதாவது அமலா பால். ‘ஆடை’ படத்தில் அவர் ஆடையில்லாமல் நடித்திருப்பது அவ்வளவு முக்கிய டாபிக் ஆகியிருக்கிறது.

amala

மேயாத மான் புகழ் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’ஆடை’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலா பால் ஆடை இன்றி வரும் டீசர் நேற்று முன் தினம் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் அமலா பால் எப்படி இது போன்று படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது.  தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை என்கின்றனர்.

amala

நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். தணிக்கை குழுவினர் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

rathnakumar

படம் குறித்து டைரக்டர் ரத்ன குமார் கூறும்போது, “தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கத்தை ஆடை படம் பேசுகிறது. அமலாபால் ஆடை இல்லாமல் தோன்றுவது சிறிது நேரம்தான். அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் உள்ளன.பைக் ஓட்டுதல் சண்டை காட்சிகள் என்று கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அமலாபால் திரையுலக வாழ்க்கையில் ஆடை முக்கிய படமாக இருக்கும்” என்கிறார். இதற்கு முன்பு சாமி இயக்கிய ‘சிந்து சமவெளி’படத்திலும் மாமனாருடன் கள்ள உறவுகொள்ளும் பெண்ணாக மிகவும் சர்ச்சையான பாத்திரத்தில் நடித்திருந்தார் அமலாபால்.

2018 TopTamilNews. All rights reserved.