• November
    22
    Friday

Main Area

Main



ராம்-ஜானு பெயரை FLAMES போட்டுப் பார்த்த பிரபல இயக்குநர்!

விஜய் சேதுபதி-திரிஷா
விஜய் சேதுபதி-திரிஷா

சென்னை: ராம்-ஜானு கதாபாத்திரத்திற்கு இயக்குநர் பிரேம் குமார் FLAMES போட்டுப் பார்த்துள்ள விடியோவை வெளியிட்டுள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த வருடம் இறுதியில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் திரிஷா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நமது பள்ளிப் பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள்.

prem kumar

அதைத்தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தைத் தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கில் ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில்  ஷர்வானந்த் மற்றும் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பிரேம்குமார், ராம் மற்றும் ஜானு பெயருக்கு   FLAMES போட்டு விளையாடிப் பார்த்துள்ளார். அதில் அவர்களுக்கு இடையே A கிடைத்தது. அப்படி என்றால் அன்பு என்று அர்த்தம். அப்போது எடுக்கப்பட்ட விடியோவை இயக்குநர் பிரேம்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.