• February
    29
    Saturday

Main Area

Main



சிறையில் சசிகலாவை சந்திக்க டி.டி.வி தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

தினகரன் - சசிகலா
தினகரன் - சசிகலா

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டி.டி.வி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர். இதையடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர்  பதவியிலிருந்து நீக்கிய  தினகரன் அந்த பதவியை தன்வசம் தக்கவைத்து கொண்டார். இதனால் சசிகலா அதிருப்தியில்  இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ttv

இந்நிலையில் இன்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருந்த தினகரனுக்கு  சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலாவை சந்திக்காமலேயே அவர் சென்னைக்கு திரும்பியுள்ளாராம். ஒருவேளை சசிகலா சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லையா? அல்லது வேறேனும் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதா? என்பது விரைவில் தெரியவரும். 

முன்னதாக சசிகலா நன்னடத்தை விதிகளின் படி விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.