உடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்க போதும்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்க போதும்!

ஸ்லிம்
ஸ்லிம்

சல்மான் கானுக்கு போட்டியா உடலை ட்ரிம்மா வைக்க முடியலேன்னாலும் தொப்பை இல்லாமல் ஃபிட்டா இருக்கணும்கிற ஆசை இல்லாத ஆள் யாருதான் இருக்கா! ஜிம்முக்கு போகணும்னா பயங்கர எக்ஸ்பென்ஸிவா இருக்கும் என்று நினைத்து வேறு வகைகளில் குண்டான உடலை குறைக்க பலபேர் முயற்சி செய்கிறார்கள்.அதிலும் மாத்திரைகள், பவுடர்கள் மூலம் உடலை குறைக்கலாம் என்பதெல்லாம் பணத்துக்கு புடிச்ச கேடுதான்.

நீங்கள் எந்த விதமான உடற்பயிற்சி செய்பவராகவும் இருங்கள்... அல்லது வாக்கிங் மட்டும்தான் என்னால முடியும் என்பவர்களாகவும் இருங்கள். உங்கள் பயிற்சியோடு இந்த உணவு டயட்டை தவறாமல் கடைபிடித்தால் நீங்கள் ஃபிட் ஆவது நிச்சயம்.

ஞாயிறு – நெல்லிக்காய்:

 

nellikai

அதிகாலையில் வெறும்  12 பெரியது மிக்ஸியில் அரைத்து ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகளை நீக்கிவிடும்.

திங்கள் – புதினா 
செவ்வாய் –கருவேப்பிலை 
புதன்– கொத்துமல்லி 
வியாழன்- இஞ்சி + தேன் 30 ml 
வெள்ளி  - வேப்பிலை, ஒரு கைபிடி எடுத்து அரைத்து விழுதாக விழுங்க வேண்டும்.
சனி - வெந்தயம் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் மென்று சாப்பிட்டு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.இப்படி செய்வதால் உங்கள் உடலிலுள்ள உள்ளுறுப்புகள் சுத்தமாகும்.

coriander

காலையில் 8-9 ப்ரேக் ஃபாஸ்டுக்கு சிறுதானிய உணவு. ( பொங்கல், தோசை ,நவதானிய கஞ்சி) 11-12  : பப்பாளி, மாதுளை,ஆரஞ்சுப்பழம் இவைகளில் ஏதாவது ஒன்று அளவோடு எடுத்துக்கலாம்.
பிற்பகல் 1-2  : கைக்குத்தல் அரிசி சாதம் 40% ,ஆவியில் வேகவைத்த காய்கறி 40% ,ஆவியில் வேக வைத்த (அயிலா,கெளங்கான்,மத்தி) மீன் 10% , கீரை 10%. உடன் சின்ன வெங்காயம் 5 , வெள்ளைப் பூண்டு 3 பல் பச்சையாக சாப்பிடனும்.

மாலை 4-5 : முளை கட்டிய பயிறு ஒரு பவுல்.( பச்சை பயிறு, சுண்டல், சோயா)
இரவு   8-9 : சிறுதானிய உணவு.( இட்லி அல்லது ராகி ரொட்டி ) உடன் ஆவியில் வேகவைத்த மீன்.

peas

நாள் முழுவதும் குடிப்பதற்கான தண்ணீர். வெள்ளரி,புதினா, எழுமிச்சை, இஞ்சி நான்கையும் முதல் நாள் இரவு நான்கு லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து அடுத்தநாள் காலையில் வடிகட்டிக் குடிக்கவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பிராயிலர் சிக்கன், பொறித்த உணவுகள், பேக்கரி ஐட்டம் , சாக்லேட், ஐஸ்க்ரீம், ஐஸ் வாட்டர். இந்த உணவு பழக்க வழக்கங்களை நீங்கள் வாழ்நாள் முழுவதும் கூட தொடர்ந்து பயன் படுத்தலாம்.உங்கள் இடுப்பு சைஸ் மாறவே மாறாது!

இதையும் படிங்க: மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்!

2018 TopTamilNews. All rights reserved.