• February
    25
    Tuesday

Main Area

Main



சமுத்திரக்கனி படத்தின் பாடலை வெளியிட்டார் தனுஷ்!! விவசாயிகளை துயர் துடைக்கும் வெள்ளை யானை... 

வெள்ளை யானை
வெள்ளை யானை

விவசாயத்தையும் விவசாயிகளையும் பற்றி பேசிய ஏராளமான படங்களுக்கு மத்தியில் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது வெள்ளையானை. தஞ்சையை பூர்விகமாகக்கொண்டதால் விவசாயத்தின்மீது தீராக்காதல் இயக்குநர் சுப்ரமணியம் சிவா விவசாயிகளின் பார்வையில் வெள்ளையானை படத்தை இயக்கியுள்ளார்.

Vellai yaanai

சமுத்திரகனி, ஆத்மிகா,யோகிபாபு என கைக்கும் கதைக்கும் அடக்கமான நடிகர்களைக்கொண்டு உருவாகியிருக்கிறது 'வெள்ளை யானை'. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரிக்கிறார் . 

 

 

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்திலிருந்து " வெண்ணிலா " எனும் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். உமா தேவி வரிகளில், சந்தோஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை விஜய் நரேன் & சங்கீதா கருப்பாயா ஆகியோர் பாடியுள்ளனர் . இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.