• November
    23
    Saturday

Main Area

Main



சேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் ! அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் !

salemhospital
salemhospital

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் 400க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ward

அவ்வப்போது பெய்த மழை காரணமாக சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் அரசு மருத்துவமனைகளை நாடியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சேலம் அரசு பொது மருத்துவமனையை பொறுத்தவரை காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வருகை எண்ணிக்கை 400 தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அடுத்து சேலம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் வரும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக டெங்கு வார்டுக்கு மாற்றவும், அதற்காக டெங்கு சிறப்பு வார்டு அமைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் மக்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி சேலம் மாவட்ட அரசு பொது மருத்துவமனை கேட்டுக் கொண்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.