kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


மோடியை எப்போதும் எதிர்த்து கொண்டே இருந்தால் உதவாது.... அவரை ஜெயிக்க முடியாது.....எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எச்சரிக்கை.....

Loading...

டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மாடல் முழுவதும் எதிர்மறையான கதை கிடையாது. அவரது பணியை அங்கீகரிக்காமல் மற்றும் தொடர்ந்து அவரை எதிர்த்து வந்தால் அது எல்லா நேரமும் உதவாது.

2014 முதல் 2019 வரையிலான காலத்தில் அவர் செய்த செயல்களை நாம் அடையாளம காண வேண்டிய நேரம் இது. அதுதான் 30 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை கொடுத்து அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளது. அவர் தன்னை மக்களுடன் இணைக்கும் மொழியில் பேசுகிறார். மக்கள் அங்கீகரிக்கும் மற்றும் கடந்த காலத்தில் செய்யப்படாத விஷயங்களை அவர் செய்கிறார் என்பதை நாம் அடையாளம் காணவிட்டால் நம்மால் அவரை (மோடியை) எதிர்கொள்ள முடியாது.

தொடர்ந்து எப்போதும் அவரை எதிர்த்து கொண்டே இருந்தால் உங்களால் அவரை ஜெயிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், நகர மேம்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார துறைகளை கவனித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.