• December
    16
    Monday

Main Area

Main



கார்களில் ஆணுறை இல்லையென்றால் அபராதம்! இதுவும் புதிய வாகன சட்டமாம்!! 

Traffic Police
Traffic Police

கார்களிலுள்ள முதலுதவி பெட்டியில் ஆணுறை எனப்படும் காண்டம் இல்லாவிட்டால் அபராதம் விதிப்பதாக வாகன ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

நாடு முழுவதும் புதிய வாகன சட்டத்தை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் படி விதிக்கப்படும் அபராத தொகையும், தண்டனையும் மிக அதிகம். வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் என பல்வேறு விதிமீறல்களுக்கு பன்மடங்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப்போல வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலும் இந்த அபராத திட்டம் கெடுபிடியாக இருந்து வருகிறது.

condom

இந்நிலையில் டெல்லியில் கார்களை சோதனை செய்துவரும் காவல்துறையினர், முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் போடுகிறார்களாம். என்னங்க சார் உங்க சட்டம்? என கேள்வி எழுப்ப தோன்றுகிறது.... இந்த சோதனை.ஆணுறை பாதுகாப்பான உடலுறவுக்கு பயன்படுவது நமக்கு தெரியும், ஆனால் மற்றொரு விஷயத்திற்கு பயன்படுத்தப்படுவது நமக்கு தெரியாது. கார்களின் குழாய்களில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால் கசிவை நிறுத்துவதற்கு ஆணுறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் கார்களில் ஆணுறை இருப்பது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர். இதனால் கார்களில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் வசூலிக்கின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.