• February
    26
    Wednesday

Main Area

Main



கார் கண்ணாடியை மட்டும் குறிவைத்து தாக்கும் காகம்..! விரட்ட வழி தெரியாமல் தவிக்கும் குடியிருப்பு வாசிகள்..!? 

george-crow
george-crow

இந்த சம்பவம் இங்கிலாந்தில் எசெக்ஸின் ப்ரைன்ட்ரீயில் உள்ள கிரீன்ஃபீல்ட்ஸ் கம்யூனிட்டி ஹவுசிங்கின் தலைமையகத்திற்கு வெளியே நடந்துள்ளது.

george-crow-02

கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்துள்ள தங்களின் கார்களை தினமும் சேதப்படுத்தி, தொல்லைதரும் காகத்தின் தாக்குதலிலிருந்து தங்களது கார்களை எப்படிப் பாது காப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள அலுவலக ஊழியர்கள்! 

அந்த காகத்திற்கு ‘ஜார்ஜ்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஜார்ஜ் தங்கள் கார்களை சேதப்படுத்தாமல் தடுக்க தங்கள் கார்களின் விண்ட்ஸ்கிரீன் வைப்பர்களை தார்பாலின் மற்றும் போர்வைகளால் மறைத்து வைத்துள்ளனர்.அப்படியும் அது தாக்குதலை நடத்திக்கொண்டேதான் இருக்கிறது என்பதுதான் அவர்களின் பல நாள் பிரச்சினை. 

george-crow-03

ஜார்ஜ் என்ற இந்தக் காகம் , கடந்த ஆண்டு நவம்பரில் தனது வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. அப்போதிலிருந்து தங்கள் கார்கள் தொடர்ந்து சேதமாவதைப் பார்த்து, திருடர்கள் யாரவது இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்களா என்று முதலில் சந்தேகப்பட்டிருக்கிறார்கள்.ஆனால்,காரில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாமே அப்படியே இருந்திருக்கின்றன. அப்புறம்தான் இந்த வேலையைச் செய்தது ஒரு காகம் என்பதே அங்கிருந்தவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது!  

george crow

ஜார்ஜ், இதுவரை அங்கிருந்த இருபது கார்களுக்கும் மேல் சேதப்படுத்தியுள்ளது. அந்தக் காகத்தை பல்வேறு வழிகளிலும் துரத்த முயற்சி செய்வார்களாம். அந்த நேரத்துக்கு மட்டும் எங்காவது பறந்து போய்விட்டு ,ஆட்களின் தலை மறைந்ததும் மீண்டும் வந்து தனது வேட்டையை ஆரம்பித்து விடுமாம். பி.பி சி செய்தி சேனலுக்கு பேசும்போது : முகத்தில் பயம் நீங்காமலே சொல்கிறார், அங்கு வேலை செய்யும்  அமண்டா பவானி என்ற பெண்.

“ இந்த காகத்தின் அட்டகாசத்தை தடுக்க ஒரு நீண்டகால தீர்வை நாங்கள் தேடுகிறோம். அவனையும் அவனது நண்பர்களையும் இங்கே வைத்துப் பராமரிக்கவே  விரும்புகிறோம். ஆனால் அது இந்த மாதிரி செயல்கள் செய்வது பிரச்சினையாகி வருகிறது” என்கிறார் தொடர்ந்து பேசும்போது.

இங்கு அலுவலக கூரையின் மேல் இரண்டு ஆந்தை உருவங்களை நிறுவி, செஸ்னி ஹாக் என்ற பருந்து வடிவ காத்தாடியை நடுவில் பொருத்தியிருக்கிறார்கள். இப்படிச் செய்தால் காகங்கள் அருகில் வர பயப்படும் என்பது அங்குள்ளவர்கள் நம்பிக்கையாம். இதுவாவது அவர்களுக்கு கை கொடுக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

2018 TopTamilNews. All rights reserved.