• November
    21
    Thursday

Main Area

Main



’மகனின் பதவியேற்பை பார்க்க முடியவில்லையே...’ பரிதாபத்தில் ஓ.பிஎஸ்.!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இந்நிலையில் அவருக்கு முதுகு வலி அதிகமானதன் காரணமாக கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார்.ஒபிஎஸ்

கோவை கணபதி பகுதியில் இருக்கும் ஆரியவைத்திய ஃபார்மசி என்பது ஆயுர்வேத வைத்தியத்துக்குப் புகழ்பெற்ற இடம். பல்வேறு திரைப்பிரபலங்களும் அரசியல் புள்ளிகளும் இங்கேதான் சென்று மறுமலர்ச்சி சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள்.

ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை எடுத்தார். ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் தேனியில் இருந்து நேற்று புறப்பட்டு கோவைக்கு வந்து சேர்ந்தார். நேற்று, இன்று, நாளை என மூன்று நாட்கள் கோவையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவருகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.ஓபிஎஸ்

இந்நிலையில் பன்னீரின் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் இன்று உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது தனது தந்தையை வருமாறு அழைத்திருக்கிறார் ரவீந்திரநாத். ஆனபோதும் ஓ.பன்னீர் டெல்லி செல்கிறாரா என்பது இப்போது வரை தெரியவில்லை.

2018 TopTamilNews. All rights reserved.