• April
    07
    Tuesday

Main Area

Main



நடிகர் ஜாக்கி ஜானுக்கு கொரோனா வைரஸ்?

jackie chan
jackie chan

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3000த்தை நெருங்கிவிட்டது. சுமார் 80 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவை மட்டுமின்றி தென் கொரியா, இத்தாலி, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  உலகம் முழுக்க உள்ள ஆராய்ச்சி அமைப்புக்கள் கொரோனா வைரஸ் கிருமியை பிரித்தெடுக்கவும், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் ஜாக்கி ஜானுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக செய்திகள் பரவின. 

 

 

இந்த செய்திக்கு ஜாக்கி ஜானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். "உங்களது அக்கரைக்கு நன்றி. நான் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், மிகவும் நன்றாகத்தான் இருக்கிறேன். நீங்கள் யாரும் கவலைப்படவேண்டாம்" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.