• March
    30
    Monday

Main Area

Main



சீனாவிலிருந்து வந்த பேருந்தை தீவைத்து கொளுத்திய கொடூரக்காரர்கள்!

வாகனத்திற்கு தீ
வாகனத்திற்கு தீ

கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவிலிருந்து உக்ரைன் சென்ற பேருந்து ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வுகானிலிருந்து அழைத்துவரபட்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வந்த போலி மின்னஞ்சலே இந்த தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சீனாவின் வுகான் நகரில் தனிமைப்படுத்‌‌தப்பட்டவர்கள் ‌உக்ரைன் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்துவதற்காக மருத்துவம‌னைக்கு பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டபோது சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.‌

வாகனத்தின் மீது தாக்குதல்

45 உக்ரைன் நாட்ட‌வர்களும், 2‌7 வெளிநாட்டவர்க‌‌ளும்‌ ப‌யணித்த‌ அந்த பேருந்தின் மீது கற்களையும், தீப்பந்தங்க‌ளையும் எறிந்ததாக கூறப்படுகிறது.‌ உடனடியாக சம்பவ இடத்திற்கு ‌வந்த பாதுகாப்புப்படையினர், பேருந்திற்கு வழிவிட உதவினர். இந்த நிலையில் பதட்டத்தை குறைப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுடன் தான் தங்கவிருப்பதாக உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையறிந்த அந்நாட்டு அதிபர், கொஞ்சமாவது கருணையுடன் செயல்படுங்கள் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். 

2018 TopTamilNews. All rights reserved.