• August
    21
    Wednesday

Main Area

Main



பிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர் 

பிக் பாஸ் 3
பிக் பாஸ் 3
Loading...

சென்னை: பிக் பாஸ் 3 குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 24 நாள்கள் கடந்து விட்டது. இதை பார்த்த ரசிகர்கள் கடந்த இரண்டு சீசன் போல் இந்த சீசன் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பெண் போட்டியாளர்கள் சரியாக உடை அணிவதில் இல்லை என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ஒரு சில படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷ் பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

அதில், 'பெண்கள் என்ன உடை அணிகிர்கள்? ஜட்டி, குட்டை உடை'னு போடுறாங்க. லாஸ்லியா எப்பவும் ஜிங் ஜிங் என்று ஆட தான் லாயக்கு, மதுமிதா தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்துருக்காங்க, அவரெல்லாம் ஒரு பெண்ணா? அதேபோல் ஒழுக்கம் பற்றி இரண்டு திருமணத்திற்கு மேல் செய்த வனிதா பேசுகிறார். அவரெல்லாம் அதைப்பற்றிப் பேசலாமா? கவினின் காதல் லீலைகள், சேரன் லாஸ்லியாவின் உறவு என்று அனைவரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

 
 

2018 TopTamilNews. All rights reserved.