• August
    26
    Monday

Main Area

Main



அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும்... காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

அபிநந்தன் மீசை
அபிநந்தன் மீசை
Loading...

காஷீமீர் புல்வாமா பகுதியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலின் போது, பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை 58 மணிநேரம் கழித்து விடுவித்தது பாகிஸ்தான் ராணுவம்.  

abinanthan

பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்கிய நாள் முதலே இந்தியா முழுவதும் தேசப்பற்றில் அபிநந்தனின் பெயரை உச்சரித்து, பிரார்த்தனை செய்தது. அதன் பின், பாகிஸ்தான் வெளியிட்ட அபிநந்தனின் வீடியோவில், அபிநந்தனின் மீசையும், பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்கும் துறை சார்ந்த கேள்விகளுக்கு அபிநந்தன் கம்பீரமாக, ‘ஐயம் சாரி மேஜர்.. ஐயம் நாட் சப்போஸ் டூ ஸே...’ என்று பதில் சொல்ல மறுத்ததையும் கண்டு இன்னும் அதிகமாக அபிநந்தனை தங்களின் ரியல் ஹீரோவாக இந்திய இளைஞர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். 

abinanthan

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்க கோரியும் இந்தியாவில் ஆதரவு பெருகி வந்த நிலை, அபிநந்தன் விடுதலை ஆனா பின்னர், இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய இளைஞர்களில் பலரும் அபிநந்தனைப் போல் மீசை வைத்து அழகு பார்த்தனர். 
இந்நிலையில் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என்று  மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.