kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


கோமாளி பட அப்டேட்: ஜெயம் ரவியின் 4வது போஸ்ட்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

ஜெயம் ரவி
ஜெயம் ரவி
Loading...

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் 4-வது போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 24வது திரைப்படம் கோமாளி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்து வருகிறார்.  

இதற்கிடையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதலில் கோமா நிலையில் ஜெயம் ரவி இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத்தொடர்ந்து 80-களின் லுக்கில் ஜெயம் ரவி இருக்கும் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. நேற்று ஆதிவாசி லுக்கில் இருந்த 3வது போஸ்டர் வெளியானது. 

comali

இந்த நிலையில் தற்போது கோமாளி படத்தின் 4வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி, ஆதி காலத்து சிறை கைதி போல் உள்ளார்.  

இந்த போஸ்ட்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.