• March
    30
    Monday

Main Area

Main



மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற செல்போன் பறிப்பு கும்பல்: 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

கோவை
கோவை

கோவை மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் 20 வயதான  தமிழ்ச்செல்வன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த தமிழ்ச்செல்வனை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து செல்போனை பறிக்க பார்த்துள்ளது. இதனால் தமிழ்ச்செல்வன் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவரின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்திவிட்டு அந்த கும்பல் தப்பித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழ்ச்செல்வன் அருகில் உள்ள தனது வீட்டுக்கு ரத்த காயங்களுடன் செல்ல பதறிய அவரது குடும்பத்தினர் தமிழ்செல்வனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால்  தமிழ்ச்செல்வன் உயிர் செல்லும் வழியிலேயே பிரிந்தது. 

ttn

இதேபோல் அதேபகுதியில் மகாலிங்கம் என்ற இளைஞரையும் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து முதுகில் கத்தியால் குத்திவிட்டு அவரின் செல்போன் மற்றும் பைக்கை திருடி சென்றுள்ளனர். அப்போது கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் அவர்களை விரட்ட அவர்கள் தப்பியோடியுள்ளனர். 

ttn

கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் முறையே சூலூர் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து  குற்றவாளிகளை தேடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

2018 TopTamilNews. All rights reserved.