• August
    26
    Monday

Main Area

Main



செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Loading...

திருவள்ளூர்: பெண்ணிடம் செயினை பறித்து கொண்டு ஓடிய கல்லூரி மாணவர்கள் இருவரை  பொதுமக்கள் அடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வாணை. இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த நிலையில் அந்த பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் தெய்வானை அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க செயினை பறித்து கொண்டு சென்றுள்ளனர். இதனால் தெய்வாணை கூச்சலிட்டு கத்தியுள்ளார். சிறிது தூரம் சென்ற அவர்கள் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர். 

crime

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞர்களைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து இளைஞர்கள் இருவரையும் அவர்கள் போலீசில் ஒப்படைத்ததாகத் தெரிகிறது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்றும்  அவர்களது பெயர் பிரசாத், மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. 

இதன் பின்னர்,பிரசாத், மணிகண்டன் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. செயின் பறிப்பு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வரும் நிலையில் கல்லூரி மாணவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.