darbar
  • January
    27
    Monday

Main Area

Main



காபி கொட்டையின் தோலிருந்து கார் பாகங்கள்... அறிவியலின் புதிய தொழில்நுட்பம்!

கார்
கார்

காப்பி கொட்டையை வைத்து என்ன பெருசா செஞ்சிடமுடியும்?! காபி போட்டுக்குடிக்கலாம்... என்பதுதான்நமக்குத்தெரியும்.சுவையான காப்பி மட்டுமல்ல,கார் உதிரி பாகங்களும் தயாரிக்க முடியும் என்று நிரூபித்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது பிரபல கார் நிறுவனமான ஃபோர்ட் கம்பெனி!

ford

காப்பி கொட்டையின் தோலினை வைத்து போர்ட் கார் நிறுவனம் ஹெட்லைட், போன்ற பாகங்களை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. நாமனைவருக்கும் தெரியும் காபி கொட்டையை வறுத்தால் அதன் தோல் உதிர்ந்து வரும்,அந்த தோலினை வைத்து காரின் பாகங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது ஃபோர்ட் நிறுவனம், 

coffee

காப்பி கொட்டையின் தோலினால் பொருட்கள் செய்யப்பட்டால் அவை நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என கண்டுபிடித்துள்ளது.காப்பிகொட்டையின்  தோலினை கம்மியான ஆக்ஸிஜனில்,அதிக சூட்டில் வைத்து அதனை பிளாஸ்டிக், இன்னும் இதர பொருட்களுடன் சேர்த்தால் அதனை பல வடிவங்களில் தயாரிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். தவிர, இவற்றிலிருந்து தயாரிக்கும் பொருட்கள் ஏனைய பொருட்களைவிட 20% முதல் 25% வரை கணம் குறைவாக உள்ளது என கண்டறிந்துள்ளது. 

car

ஆதலால், நார்த் அமெரிக்காவில் உள்ள மெக்டோனால்ட்ஸிடம் காப்பி கொட்டையின் தோலினை போர்ட் நிறுவனத்திற்கு அனுப்புமாறு போர்ட் கேட்டுள்ளது. இந்த ப்ராஜெக்ட்டில் ஹெட்லைட் தயாரிக்கும் நிறுவனமான வர்றோக் லைட்டிங் சிஸ்டம்ஸ்(Varroc Lighting Systems) மற்றும் காப்பி கொட்டையை பதப்படுத்த காம்படிட்டிவ்  டெக்நாலஜியும் (Competitive Technologies) இணைந்து மார்க்கெட்டில் களம் இறங்கப் போகிறார்கள்.’ பளிச்’சென்று விளக்கு ஒளிரட்டும்.

2018 TopTamilNews. All rights reserved.