• August
    25
    Sunday

Main Area

Main



அடேய் கரப்பான் பூச்சிக்குப் பொறந்தவனுகளா...அடுத்து என்னடா செய்யப்போறீங்க?...

கரப்பான் பூச்சி சேலஞ்ச்
கரப்பான் பூச்சி சேலஞ்ச்
Loading...

வேலவெட்டி இல்லாத ஆசாமிகள் இணையதளங்களில் ஆடும் ஆட்டம் ஒரு வெவஸ்தையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கி கி சேலஞ்ச்களின் தொடர்ச்சியாக ஒரு மட்டமான கரப்பான் பூச்சி சேலஞ்ச் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.

cockroach

மியான்மரைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் அலெக்ஸ் அங் கடந்த வாரத்தில் ஒரு நாள் பொழுதுபோகாமல் தவித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரப்பான் பூச்சியை எடுத்துத் தன் முகத்தில் நடமாட விட்டு ‘நண்பர்களே இது காக்ரோச் சேலஞ்ச்’ என்று துவக்கவிழா நடத்தி வைக்க, அது மெல்லப் பரவி தற்போது வைரல் கண்டிசனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

cockroach

அது தற்போது பல நாடுகளுக்கும் பரவ, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சிகளைப் பிடித்து செல்ஃபி எடுத்து வலைதளங்களில் பகிர ஆரம்பித்துள்ளனர். அடுத்து பல்லி, பாம்பு,சிங்கம்,புலி,கரடி சேலஞ்ச்களும் வெகுதூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.