• August
    24
    Saturday

Main Area

Main



11 டன் குப்பை, 4 டெட்பாடி - எவரெஸ்ட்டை சுத்தம் செய்தபோது கிடைத்தவை!

Garbage on Everest
Garbage on Everest
Loading...

எவ‌ரெஸ்ட் சிகரத்திற்கு சாகச பயணமாக ம‌லேயேறி போட்டோவுக்கு போஸ் தருபவர்களைப் பற்றிய செய்திகள்தான் அதிகம் கிடைக்கும். சாகச பயணத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்து குறித்து பெரியளவில் செய்திகள் வெளிவருவதில்லை. பயணம் மேற்கொள்ளும் சாகசவிரும்பிகள் விட்டுச்செல்லும் குப்பை எண்ணிக்கை வருடாவருடம் பெருகிக்கொண்டே செல்வதைக் கண்ட நேபாள அரசு, எவரெஸ்ட் சிகரத்தை தனது ராணுவம் கொண்டு சுத்தப்படுத்த முடிவுசெய்தது.

Mount Everest Cleaning

இரண்டு மாத காலம் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஸ்வச் எவரெஸ்ட் பணியின் முடிவில், மொத்தம் 11,000 கிலோ அளவுக்கு குப்பைகளும், நான்கு உயிரற்ற மனித உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு மலையடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்த நான்கு பேரில் இருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 11 டன் குப்பையில், காலியான‌ ஆக்சிஜன் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேட்டரிகள், உணவு பொட்டலங்கள், மனிதக்கழிவுகள் என பலதரப்பட்ட சமாச்சாரங்கள் இருந்திருக்கின்றன.

Mount Everest Campers

மலேயேற்றம் செல்பவர்களால் எவரெஸ்ட் சிகரம் குப்பைமேடாவதை தவிர்க்க, நேபாள அரசு சில கடுமையான விதிகளையும் வகுத்திருக்கிறது. மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 8 கிலோ அளவுக்காவது அவருடைய சொந்த குப்பையை கீழே கொண்டுவந்துவிடவேண்டும் என்பதும் விதிகளில் ஒன்று. நல்ல விஷயம்தானே? பிறகு எப்படி குப்பை சேர்கிறது? மேலே சென்றவர்கள் கீழே வரும்போது குப்பைகளை ஓரளவுக்கு எடுத்து வந்துவிடுகிறார்கள். ஆனால், மலையேறச் சென்று ஒரெயடியாக கைலாயம் சென்றவர்கள் குப்பையை யார் பொறுக்குவது?

2018 TopTamilNews. All rights reserved.