• February
    29
    Saturday

Main Area

Main



அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்; மூவர் கூட்டணியின் முரட்டுக்குத்து..!

sevur ramachandran
sevur ramachandran

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு பல அதிமுக அமைச்சர்களின் கனவுகளைத் தகர்த்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக அதிகத் தோல்விகளைச் சந்தித்த மாவட்டங்களில் ஒன்று. 

மாவட்ட ஊராட்சிகள் இங்கு மொத்தம் 34. இதில் அதிமுகவிற்கு கிடைத்தவை 9 இடங்கள்தான்.ஒன்றிய குழு தலைவர் தேர்தலிலோ,18 இல் 4 இடங்கள் மட்டுமே அதற்குக் கிடைத்தது. இதில்  திமுக-விற்கு செல்வாக்குள்ள தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரனுக்கு இங்கே பெரிதாக எதிர்ப்பில்லாமல்தான் இருந்தது.

admk-mps

ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டு இருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பண்ணீர்செல்வம் இருவரும் தங்களது பழைய பகைகளை மறந்து சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக அணி சேர்ந்து இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலின்போது அனைத்து வேட்பாளர்களையும் தேர்வு செய்தது சேவூர் ராமச்சந்திரனும்,கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதிமுகவிற்கு தாவி வந்த இருவரும்தான், அவர்களைக் கேட்காமல் அமைச்சர் சுயமாக எந்த முடிவும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது இவர்களுடன் ஒரு முன்னாள் மாவட்டச் செயலாளரும் கைகோர்த்து இருக்கிறார். 

இந்த மூவரணி,சேவூர் ராமச்சந்திரனுக்கு சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்களில் அமைச்சர் ஏதும் ஹீரோயிசம் காட்டாவிட்டால்,அவர் வசமிருக்கும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவி  கைவிட்டுப் போகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.