kaappan-mobile kaappan-large
  • September
    23
    Monday

Main Area'நாங்க இல்லன்னா தமிழகம் வளர்ந்திருக்குமா? : புதிதாய் மொழி பிரச்னையை கிளப்பும் ராதாரவி

சென்னை: தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்?  என்று நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.

நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களின் 40-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடந்த இந்த விழாவில் நடிகரும் எம்.ஆர் ராதாவின் வாரிசுமான  ராதாரவி கலந்து கொண்டார். 

radharavi

அப்போது விழாவில் பேசிய அவர், தமிழகத்தின் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும் தூணாக இருப்பவர்கள் தெலுங்கர்கள் தான். தேனி, திண்டுக்கல் விருதுநகர், சிவகாசி போன்ற மாவட்டங்களில் தெலுங்கர்கள் தான் போட்டியிடுகிறார்கள். தெலுங்கர்களை ஆதரித்தவர்கள் தான் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள்' என்றார்.

radharavi

தொடர்ந்து பேசிய அவர், எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான். இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண். தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்?விரைவில் முதல்வரை சந்தித்து தெலுங்கு இனத்திற்கு என்ன தேவை என முறையிடுவோம். மிக விரைவில் தெலுங்கு மாநாடு நடைபெறும். என் மொழியை நான் கற்கவேண்டும்' என்றார். 
 

manikkodimohan Mon, 09/23/2019 - 10:08
tamilnadu development telugu peoples actor radharavi  ராதாரவி தமிழகம் சினிமா

English Title

tamilnadu development is not possible without telugu peoples

News Order

0

Ticker

0 பச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி, வனிதா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று சேரன்  வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 

tharshan

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், 'பிக் பாஸ் கான்ஸ்டக்ஷன் ரூமில் பிக் பாஸ் தர்ஷனிடம் நீங்கள் காப்பாற்ற விரும்பும் அந்த ஒருவர் யார் என்று கேட்க, அதற்கு தர்ஷன் ஷெரின். ஏன்னா ஷெரின்  பெயரை யாரும் சொல்ல மாட்டாங்க என்று கொள்கிறார். அப்போ உங்க முன்னாடி இருக்க பச்சை மிளகாயில் ஒன்ன  எடுத்து சாப்பிடுங்க என்று பிக் பாஸ் சொல்கிறார். தர்ஷனும் பச்சை  மிளகாயை சாப்பிடுகிறார்.  உடனே பிக் பாஸ் நீங்க  இன்னொருத்தரையும் காப்பாத்தலாம் என்று சொல்ல. கொஞ்சம் கூட யோகிக்காமல் பச்சை மிளகாயை மீண்டும் சாப்பிடுகிறார் தர்ஷன். யாரை காப்பாத்த போறீங்க என்று பிக் பாஸ் கேட்க சாண்டி  அண்ணா' என்று சொல்கிறார் தர்ஷன். 

 

இதன்மூலம் ஹவுஸ்மேட்ஸ் யாரைக் காப்பாற்றுவார்கள் யாரை எவிக்ஷனுக்கு அனுப்புவார்கள் என்பது இன்று தெரியவரும். 
 

manikkodimohan Mon, 09/23/2019 - 08:59
bigg boss 3 tamil tharshan sandy தர்ஷன் தமிழகம் சினிமா

English Title

bigg boss 3 tamil: tharshan eating green chill for sherin and sandy

News Order

0

Ticker

0 முழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனாவை பாருங்க!

லாஸ் ஏஞ்சல்ஸ்: தலைவி படத்திற்காக ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்ட்டில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரணாவத் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

kanagana

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்பு காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 

kangana

இந்நிலையில் தலைவி படக்குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளது. காரணம் ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்ட்  அங்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனாவின் சகோதரி ரங்கோலி, உருவத்தை மாற்றுவதற்கான மேக் அப் செய்கிறார். ஒரு நடிகைக்கு இது எளிதானது அல்ல. இதைப் பார்ப்பதற்கே எங்களுக்குச் சங்கடமாக இருந்தது.ஆனாலும் அவர் அமைதியாக இருந்தார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

manikkodimohan Mon, 09/23/2019 - 07:34
kangana ranaut thalaivi Jayalalithaa biopic கங்கனா சினிமா

English Title

Kangana Ranaut undergoes prosthetic look test for Jayalalithaa biopic, ‘Thalaivi’

News Order

0

Ticker

0 நம்பி உல்லாசம் அனுபவிச்சேன்... அதை வீடியோ எடுத்து மிரட்டுகிறார்... நடிகர் மீது தமிழ் நடிகை பகீர்.. !

ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் ஒருவர் மீது நடிகை ஒருவர்  புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் வடபழனி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பக்ருதீன் கடந்த ஆண்டு என்னை காதலிப்பதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வந்தேன். நான் அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வருகிறார். ஏற்கனவே பக்ருதீன் மீது திருவல்லிக்கேணி, புழல் போலீசில் புகார் செய்து இருந்தேன். அப்போது அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தனர்.

jenifer

தற்போது மீண்டும் பக்ருதீன் பழைய வீடியோ காட்சிகளை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார். நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு சென்றார். பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ கூறி உள்ளார். இதையடுத்து பக்ருதீன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

karuppan Sun, 09/22/2019 - 16:07
actress jenifer illegal video Tamil Cinema நடிகை சினிமா

English Title

Porn video is intimidating ... Sexy actress complains on actor

News Order

0

Ticker

1 அஜித் பாடலால் சினிமா வாய்ப்பு! நெகிழும் பார்வையற்ற இளைஞர்! வரிசையில் நிற்கும் யுவன், இமான்

சமூகவலைதளங்களை பொழுதுபோக்குவதற்காகவும், ஆபாச குப்பைகளை கொட்டுவதற்காகவும் தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், இம்மாதிரியான சமூக வலைத்தளங்களை சரியாக கையாள்பவர்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் பரவுகிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாய் திகழ்கிறார் திருமூர்த்தி   எனும் மாற்றுதிறனாளி. 

சமீபத்தில், மேற்குவங்கத்தில் ராணுமோண்டல் என்பவர் அச்சு அசல் லதா மங்கேஷ்கரின் குரலில், அவருடைய பாடலை ரயில் நிலையத்தில் பாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அவருக்கு பாலிவுட் சினிமாக்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன. ஒரே பாடலின் மூலமாக அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது சமூக வலைத்தளங்கள் தான். தற்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் பாடலைப் பாடியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. திருமூர்த்தி

இந்த வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், திருமூர்த்தியின் தகவல்கள் கிடைக்குமா? அவரை என்னுடைய படங்களில் பாட வைக்க ஆசைப்படுகிறேன் என்று கேட்டிருந்தார். இசையமைப்பாளர் இமான் கேட்ட அடுத்த சில மணி நேரங்களில், அவருடைய இணையதள பக்கத்தில் திருமூர்த்தியின் தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் பாடுவதற்கு திருமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.இமான்

சிறு வயதிலேயே  அம்மாவை இழந்த திருமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகவே வலம் வந்திருக்கிறார் திருமூர்த்தி. அப்போது, விளையாட்டாக திருமூர்த்தியைப் பாட்டு பாடச் சொல்லி, அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள் நண்பர்கள். பாடலையும் தாண்டி பல தலைவர்களின் குரல்களிலும் அச்சு அசல் அப்படியே திருமூர்த்தியால் பேச முடியுமாம். எங்கோ மூலையில் இருக்கும் ஒரு கிராமத்து பார்வையற்ற இளைஞனின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறது இணையத் தொடர்பு! இசையமைப்பாளர் இமானைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்.

sundar Sun, 09/22/2019 - 13:35
Cinema Opportunity Blind Youth ajith song music dir iman வைரல் பாடகர்கள் தமிழகம் சினிமா

English Title

Cinema Opportunity for Blind Youth Because of Ajith's Song

News Order

0

Ticker

1 கமலை  அசர வைத்த லாஸ்லியா! பின் வாங்கிய கமல்ஹாசன்! வெளியானது முதல் புரோமோ!!

பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும். இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில்,  பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று இருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். ஒன்று கவின் மற்றொருவர் சேரன்...

 

Kamal

இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் காஸ்லியாவிடம் கமல் யாரை நீங்கள் காப்பாற்ற நினைக்கிறீர்கள் என கேட்க அதற்கு அவர் கவின் மற்றும் சேரன் ஆகிய இருவர் மீது கைவைத்ததால் கமல் சற்று அதிர்ச்சியில் உறைந்தார். அதன்பின்  அதற்கு நான் தான் தேவையில்லை இவர்களோடு அரட்டை அடிக்கிறேன். நேரடியான யாரை காப்பாற்ற வேண்டுமோ அவரை காப்பாற்றி விட்டிருக்கலாம் என விளையாட்டாக பேசினார். 

aishwarya Sun, 09/22/2019 - 11:49
Bigg Boss Tamil kamalhassan losliya தமிழகம் சினிமா

English Title

Bigg boss promo 1

News Order

0

Ticker

1 ஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்! சமாதானம் செய்துவைக்கும் கமல்ஹாசன்!!

பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 85 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்னையே கவின் - லாஸ்லியா தான்.... அதையொட்டியே பல எபிசோடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் எந்த போட்டியாளர் வெற்றி பெற்றாரோ அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார்.

இந்நிலையில் இந்த டாஸ்கின் ஒரு விளையாட்டின்போது, லாஸ்லியாவை துரத்திக்கொண்டு சென்ற சாண்டி, லாஸ்லியாவை கீழே தள்ளிவிடுகிறார். இதனால் லாஸ்லியாவுக்கு சிறிய காயங்கள் ஏற்படுகின்றன. இதனைப்  பார்த்து பொங்கி எழுந்த கவின், சாண்டியை அனைவரது முன்பும் சரமாரியாக திட்டிவிடுகிறார். இதனால் மனமுடைந்த சாண்டி, லாஸ்லியாவிடமும், கவினிடமும் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் கவின் நன்றாக பேசாததால் பிக்பாஸிடம் சொல்லி கண்ணீர் வடித்தார். 

biggboss

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று கமல்ஹாசனின் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு வந்தது. அப்போது சாண்டி, லாஸ்லியாவை தள்ளிவிட்டதற்காக அப்போதே சாரி கேட்டுவிட்டேன். ஆனாலும் கவின் திட்டினான் என குற்றஞ்சாட்டுகிறார். அதற்கு கமல், சாண்டி கீழே தள்ளிவிட்டதை லாஸ்லியா கூட பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை , கவின் தான் பெரிது படுத்துகிறார் என கூறினார். மேலும் நீங்கள் இருவரும் நண்பர்கள் தானே, நண்பர்கள் இருவருக்குமிடையில் என்ன பிளவு? என்றும் கேள்வி எழுப்பினார்.  அப்போது சாண்டி நாங்கள் இருவரும் மீண்டும் பேசிவிட்டோம் என தெரிவித்தார். உடனே கமல் என்ன பேசுனீர்கள் என மறுபுறம் கேள்வியெழுப்பினர். இடைமறித்த கவின் நான் பேசலாமா சார் என கமலிடம் கேள்வி கேட்பதோடு இன்றைய மூன்றாவது புரோமோ முடிவடையிறது. 

aishwarya Sat, 09/21/2019 - 18:54
Bigg Boss Tamil sandy சினிமா

English Title

bigg boss tamil promo 3

News Order

0

Ticker

1 இந்தியில் உருவாகவுள்ள கோமாளி!

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கோமாளி திரைப்படம் இந்தியில் உருவாகவுள்ளது. 

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கோமாளி. இருபது வருடம் கோமாவில் இருக்கும் கதாநாயகனுக்கு நினைவு திரும்பிய பின் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சமூக கருத்தை சேர்த்து படமாக்கியிருந்தனர். தமிழ்நாட்டில் பெரும் வெற்றியடைந்த கோமாளி படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

comali

இதற்கான உரிமையை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளாருமான போனி கபூர் வாங்கியுள்ளார். கோமாளி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் தன்னுடைய மகன் அர்ஜூன் கபூரை நடிக்க வைக்க போனி கபூர் திட்டமிட்டுள்ளார். 

aishwarya Sat, 09/21/2019 - 18:25
Hindi comali comali சினிமா

English Title

Arjun Kapoor to star in Hindi remake of Jayam Ravi's 'Comali'

News Order

0

Ticker

1 உலகின் மிக வலிமையான பெண் இவரா...ஃபார்ச்சூன் இந்தியா அறிவிப்பு

ஃபார்ச்சூன் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் முதல் 50 பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார்.

பாலிவுட்டுக்குள் 2008 ஆம் ஆண்டு “ரப் நே பனா தி ஜோடி'” என்ற படத்தில் அனுஷ்கா சர்மா தடம் பதித்தார்.  இந்த பட்டியலில் இடம் பெரும் குறைந்த வயதுடைய பெண் இவர் மட்டுமே. இவர் 39 வது இடத்தில் உள்ளார்.ரப் நே பனா தி ஜோடி


பார்ச்சூன் இந்தியா நடிகை அனுஷ்கா சர்மா பற்றி வெளியிட்ட குறிப்பில், "சர்மா நிவ்யா, எல்லே 18, மின்த்ரா மற்றும் லெவி போன்ற பல பிராண்டுகளின் விளம்பரத் தூதராக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இவர்  ஒரு தயாரிப்பாளரும் கூட. தன்னுடைய 25 வயதில் சொந்தமாக ஸ்லேட் பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அதன் மூலம்  என்ஹெச் 10, பில்லாரி மற்றும் பரி ஆகிய மூன்று சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.சர்மா

இது 40 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. பாலிவுட்டைத் தாண்டி, கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நெட்ஃபிக்ஸ் உடன் இணைந்து ‘புல்பூல்’ என்ற திரைப்படத்தையும், ‘மை’ என்ற வலைத் தொடரையும் தயாரித்து வருகிறார். அனுஷ்கா சர்மா

இதனால் இந்தியாவின் மிக வலிமையான பெண்களின் பார்ச்சூன் வருடாந்திர தரவரிசை பட்டியில் இவர் இடம்பெற்றுள்ளார். அவர்களின் வணிக புத்திசாலித்தனத்தாலும், சமூக மற்றும் கலாச்சார பண்பாலும் இந்த பட்டியலில் சேர்த்து ஃபார்ச்சூன் இந்தியா கௌரவித்துள்ளது.

Meenal Sat, 09/21/2019 - 18:06
Anushka Sharma Fortune India 2019 Most Powerful Woman அனுஷ்கா சர்மா சினிமா

English Title

Fortune India's most powerful woman 2019 - Anushka Sharma

News Order

0

Ticker

1 நக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின் 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

biggboss

பிக் பாஸ் சீசன் 3 விறு விறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடந்து வருகிறது.இதில் ஒரு போட்டியில் சாண்டி லொஸ்லியா விளையாடும் போது சாண்டி தள்ளிவிட லொஸ்லியா விழுந்தார். அதனை கண்ட கவின் சாண்டியிடம் வாக்குவதில்  ஈடுபட்டார் .அதை பற்றி கமல் அவர்கள் கவினிடம் கேள்வி கேட்டுள்ளார்.

நீங்கள் டாஸ்கை டாஸ்க்காக பார்த்தீர்களா  இல்லை அதேயும் தாண்டி வேறுவிதமாக  பார்த்தீர்களா என கேட்டார் அதுக்கு பதில் அளித்த கவின் எதோ ஒரு எமோஷன்ல  கேட்டுட்டேனு சொன்னார் .தர்ஷன்க்கு கையில் அடிப்பட்டப்ப ஏன் அந்த எமோஷன் வரலன்னு நக்கலா கமல் கவினிடம் கேட்டார்.

இந்த வாரம் எவிக்ஷனில்  கவின் ,சேரன்,ஷெரின்,லொஸ்லியா இருக்கிறார்கள்.

gowtham Sat, 09/21/2019 - 17:43
kamalhassan biggboss promo கமல் சினிமா பிக்பாஸ் சீசன் 3

English Title

kamal asked questions to kavin

News Order

0

Ticker

0 அஜித் படத்தின் மீது மோசடி! பிரபல தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு!

 

மிஸ்டர் க்ளீன் என்கிற பெயர் அன்றிலிருந்து, இப்போது வரையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகை சார்ந்தவர்களிடத்திலும் நடிகர் அஜித்திற்கு உண்டு. அதைப் போலவே சரியான திட்டமிடல், குறித்த நேரத்தில் சம்பளப் பட்டுவாடா என்று மிஸ்டர் க்ளீன் இமேஜ் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கும் உண்டு.

Vivegam movie

கடந்த 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது அஜித் நடித்த  'விவேகம்' படம் . அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சத்யா ஜோதி பிலிம்ஸின் பங்குதாரர் தியாகராஜன், விவேகம் படத்தை வெளிநாடுகளில் வெளியிட மலேஷியாவைச் சேர்ந்த ஆர்.டி.எஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.4.25 கோடி படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே பெற்றுள்ளார். 

ஆனால், அவர் பணத்தை வாங்கி கொண்டு, தான் சொன்னப்படி ஆர்.டி.எஸ் நிறுவனத்திற்கு அளிக்காமல் வேறு ஒரு நிறுவனத்திற்கு படத்தை வெளியிடுவதற்கான ஒப்புதலை அளித்து விட்டதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் மனு அளித்தார். 

அந்த மனுவை இன்று விசாரித்த மத்திய குற்றப் பிரிவு எழும்பூர்  நீதிமன்றம், தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

newsdesk Sat, 09/21/2019 - 17:35
Vivegam movie Producer Thiyagarajan Sathya jyothi films Case Filed Actor ajith fraudism against vivegam movie vivegam movie சினிமா

English Title

Fraud over Ajith's film! Case against famous producer!

News Order

0

Ticker

0 
அச்சச்சோ.. ஓடிடுங்க... நடிகர் சிம்புவும் அரசியலுக்கு வர்றாராம்!

தமிழக அரசியல் சமீபமாய் தறிகெட்டு போயிருப்பதற்கு நிறைய்ய... நிறைய்ய... உதாரணங்களைச் சொல்லலாம். காமராஜர், அண்ணா, எம்ஜிஆரை எல்லாம் விடுங்க... கட்டக் கடைசியா ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்தப்போ கூட மத்தியில் ஆள்கின்ற அரசுக்கு அது காங்கிரஸோ, பாஜகவோ தமிழகத்தின் மீது ஒரு மரியாதையும், பற்றும் இருந்தது. அவர்கள் எடுக்கும் சோப்ளாங்கியான திட்டங்களுக்கெல்லாம் தலையாட்டுகிற பொம்மையாக தமிழக அரசு இருக்காது என்கிற கணிப்பும் தமிழகத்தின் மேல் இருந்தது. தற்போது கம்பீரமாய் இருந்த தமிழக அரசு, எடுப்பார் கைப்பிள்ளையாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் கருதி வருகிறார்கள்.

karunanidhi and jayalaitha

ஜெயலலிதா இறந்து வருடங்கள் கடந்த நிலையிலும், ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தா நீட் வந்திருக்குமா, ஹைட்ரோ கார்ப்பன், ஸ்டெட்லைட் வந்திருக்குமா என்றெல்லாம் குரல்கள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவு ஏன்... கருணாநிதி மட்டும் இருந்திருந்தால், ஓபிஎஸ்,எடப்பாடி எல்லாம் இந்நேரம் ஆட்சியில் இருந்திருப்பாங்களா... அட அரசியல்ல தான் இருந்திருப்பாங்களா... என்று எதிர்கட்சியான திமுக வையும் மக்கள் விட்டுவிடவில்லை. அதற்கேற்றாற் போல அவர்கள் அறிவித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எல்லாம் புஸ்வானமாக்கி, வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம்... உதயநிதி ஸ்டாலின் எல்லாம் தீவிர அரசியல்ல வர்றப்போ நான் வரக் கூடாதா என்று தாய்லாந்தில் மசாஜ் செய்துக் கொண்டிருக்கும் நள்ளிரவில் சிம்பு யோசிச்சிருப்பார் போல... சரி அதையும் தான் பார்த்துடுவோம்... நான் முன்வெச்ச காலை பின் வெச்சதில்லை... என்று நள்ளிரவு நேரத்திலும், சென்னையில் இருக்கிற தன் அடிபொடிகளுக்கு செய்தி அனுப்பி, ‘அண்ணன் ஒரு முக்கியமான விஷயத்தை நாளைக்கு அறிவிக்கப் போறேன்’ என்று மீடியாக்களுக்கு தகவல் அனுப்பி பீதியைக் கிளப்பி வை.. நாளைக்கு விடிஞ்சா நம்மளோட அரசியல் எண்ட்ரி பற்றி தான் பேச்சாக இருக்கணும் என்று கூறியிருக்கிறாராம்.

str

இருக்கும் ஒட்டு மொத்த மீடியாக்களும், அரண்டு போய் சிம்பு வட்டாரத்தில் விசாரித்தால், அண்ணன் அறிவிக்க ஆசையாவும், ஆர்வமாகவும் தான் இருந்தாரு... இப்போ தூங்கிக்கிட்டு இருக்காரு... எழுந்திரிச்சதும் அறிக்கையை அனுப்பி வைக்கிறோம்’ என்று தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
டி.ஆர் காலத்து அரசியலை எல்லாம் பார்த்து பழகிய தமிழ் மக்கள், சிம்புவின் அரசியல் எண்ட்ரியையும் காணுகிற வாய்ப்பு வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள். தவிர, ஒரு பக்கம் உதயநிதி, இன்பா எல்லாம் அரசியல்ல பதவியோட வலம் வரும் போது, இன்னொரு பக்கம் ரஜினி வந்தால், தனுஷும் செல்வாக்கோடு அரசியல்ல வருவாரு.. அப்போ அரசியல் தான் என்னோட களம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாராம் சிம்பு. 

str and seeman

சும்மாயிருந்த சிம்புவை, கொம்பு சீவி விட்டது சீமான் தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஒரு கூட்டத்தில், தன் கதையில் நடிப்பதற்கு விஜய் எல்லாம் பயப்படுகிறார். எடப்பாடிக்கு எல்லாமா விஜய் பயப்படுவது. என் தம்பி சிம்பு பயப்படாமல் இருக்கிறான் பாரு என்று சீமான் உசுப்பேற்றிவிட, புது உற்சாகத்துல மிதக்குகிறாராம் சிம்பு.
ஆகையால்... மக்கழே... தாய்லாந்தில் இருந்து தாய் மாநிலத்தைக் காக்க சிம்பு ரிட்டர்ன்ஸ்...ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!

gowtham Sat, 09/21/2019 - 14:10
str enter into politics சிம்பு அரசியல் சினிமா

English Title

actor str enter into politics

News Order

0

Ticker

1 

அஜித், ஷாலினி

புது லுக்கில் ப்ரெஷ்ஷான அஜித்! வைரலாகும் அஜித், ஷாலினி வீடியோ!

தமிழ் சினிமாவில் எப்படி ஒரேயொரு சூப்பர் ஸ்டாராக ரஜினி இருக்கிறாரோ அப்படி, அஜித் தனி மாஸுடன் இருந்து வருகிறார். தன்னுடைய பட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், எந்தவொரு பொது நிகழ்ச்சிகளில...


பிக் பாஸ் 3 தமிழ்

டிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்?!

பிக் பாஸ் 3 தமிழ் போட்டியில் டிக்கெட் டு பினாலே போட்டியில் வெற்றி பெற்றுள்ளது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Nagarjuna

நாகார்ஜூனா வீட்டில் உடல் சிதைந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் ஹைதராபாத் பண்ணை வீட்டில் உடல் சிதைந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.