• April
    05
    Sunday

Main Area

Main



இனி தமிழக அரசு மூலமாக சினிமா ஆன்லைன் டிக்கெட் விற்பனை - கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

தமிழக அரசின் மூலம் சினிமா ஆன்லைன் திரைப்பட டிக்கெட் விற்பனை திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ,” தமிழக அரசு மூலமாக சினிமா ஆன்லைன் டிக்கெட் விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைத்துறையினர் உடன் மூன்று கட்டமாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தமிழக அரசின் மூலம் ஆன்லைன் டிக்கெட் விற்பனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டிக்கெட் கட்டணம் முறையாக கண்காணிக்கப்படும்.

cinema theatre

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆக மாற்ற திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளன. விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும்” என தெரிவித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.