• August
    20
    Tuesday

Main Area

Main



டிவிட்டரில் 'காவலாளி நரேந்திர மோடி' என்று பெயரை மாற்றிய மோடி : பாஜகவின் தேர்தல் யுக்தியா?

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Loading...

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் 'காவலாளி நரேந்திர மோடி' என தனது கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் முழு முனைப்புடன் செய்து வருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை ஆகியவற்றைச் செய்து வருகிறது.

modi ttn

இதனிடையே தேசிய மற்றும் மாநில கட்சிகளும் தேர்தலுக்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நானும் காவலாளிதான்' என்கின்ற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார். அதில், 'உங்கள் காவலாளி தேசத்துடன் துணை நிற்கிறார். ஆனால், நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழலை, சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறார்களோ அவர்கள் எல்லாம் காவலாளிகள்தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று அனைத்து இந்தியர்களும் 'நானும் காவலாளிதான்' என்று குறிப்பிட்டிருந்தார்.

amit sha ttn

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் 'காவலாளி நரேந்திர மோடி' என தனது கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன், தாமேந்திர பிரதான் உள்ளிட்டோரும் தங்கள் டிவிட்டர் கணக்கின் பெயரை காவலாளி என்று மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.