• November
    17
    Sunday

Main Area

Main



சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

புதுடெல்லி:  விரைவில் புதிய பாஸ்போர்ட்டில்  சிப் பொருத்தப்பட்டிருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

passport

 பாஸ்போர்ட் சேவா திவஸ் என்னும் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  கலந்து கொண்டார்.அப்போது விழாவில் பேசிய அவர், 'பாஸ்போர்ட்டில் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை கையாள உள்ளது. அதில் ஒன்று தான் பாஸ்போர்ட்டில் சிப் அமைக்கும் நடைமுறை. இது விரைவில் நடைமுறைக்கு  வரும்' என்றார். 

passport

தொடர்ந்து பேசிய அவர், ' வரும் காலங்களில்  ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் இருக்கும். இதுவரை நாங்கள்  ஒருகோடி பாஸ்போர்ட்டை விநியோகம் செய்துள்ளோம். மேலும் ஏற்கனவே கூறிய இடங்களிலும் விரைவில் பாஸ்போர்ட் சேவை மையம் ஆரம்பிக்கப்படும்' என்று உறுதி தெரிவித்தார்.

passport

இந்த விழாவில் நாட்டிலேயே சிறந்த பாஸ்போர்ட் சேவை மையமாக ஜலந்தர் பாஸ்போர்ட் மையம் விருது பெற்றது. இரண்டாவது இடத்தை  கொச்சின் பாஸ்போர்ட் மையமும்,  மூன்றாவது இடத்தை கோயும்புத்தூர் பாஸ்போர்ட் சேவை மையமும்  பெற்றன.  இவர்களுக்கு  அமைச்சர் ஜெய்சங்கர் விருது வழங்கி கௌரவித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.