'நீயெல்லாம் என் குரலுக்கு ரசிகன்னு சொன்னா எனக்கு தான் அசிங்கம்' : வெளுத்து வாங்கும் சின்மயி

 சின்மயி
சின்மயி


சமீபத்தில் சமூகவலைதளத்தில்  நடிகை கஸ்தூரியை அஜித் ரசிகர்கள்  சிலர் கொச்சையான வார்த்தையில் பேசி இழிவுபடுத்தியுள்ளனர்.

ttn

 இதை கண்டு கடுப்பான கஸ்தூரி அவர்களின் மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளுடன், 'மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க' என்று குறிப்பிட்டுள்ளதோடு dirtyAjithFans என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டார்.

ttn

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை கண்டா அஜித் ரசிகர்கள் சிலர், உங்களை பேசியவர்களின் பெயரை குறிப்பிட்டு திட்டுங்க, அஜித் ரசிகர்கள் என்று சொல்லாதீங்க என்று கூறி வந்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில், ' நீங்கள் உடனே சைபர் க்ரைமில் புகார் கொடுங்கள்.  இந்த தளத்தை டிவிட்டர் இந்தியா நிறுவனம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற விஷயங்களை பொருட்படுத்துவதில்லை. கற்பழிப்பு அச்சுறுத்தல்கள் கூட இங்கே சரி தான். உடனே  விரைவாக வழக்குத் தாக்கல் செய்யுமாறு நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

இதற்கு நெட்டிசன் ஒருவர், 'நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் மாற்று கருத்து இல்லை ஆனால் தனிப்பட்ட நபரின் தவறுக்காக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒருத்தரை தாக்குவது தவறு. பெண்களை இழிவாக பேசுவது தவறு வன்மையாக கண்டிக்கிறோம், அனைவரும் உங்கள் குரலின் ரசிகை தான் ஆனால் நீங்கள் செய்வது அனைத்தும் சரி அல்ல என்று......' என்றார். இதை கண்டு கடுப்பான சின்மயி, உங்கள் மாதிரி ஆம்பளைங்களாம் நான் உத்தமியான்னு சொல்ல தகுதியாச்சும் இருக்கான்னு  யாருக்கு தெரியும், உங்கள போல அழுகிய வார்த்தைகள் யூஸ் பண்ணுற ஆட்கள் எல்லாம் என் குரலுக்கு ரசிகர்ன்னு சொன்னா எனக்கு தான் அவமானம்' என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.