kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


இணைய பயன்பாட்டில் இந்தியாவிற்கு இரண்டாமிடம்... அமெரிக்கர்களை பின்னுக்கு தள்ளிய இந்தியர்கள்!!

Internet users
Internet users
Loading...

உலகளவில் இணையப்பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக மேரி மீகர் ஆய்வு தெரிவித்துள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஒருசேர கட்டிப்போட்டிருக்கிறது, டிஜிட்டல் யுகம். செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஐபாட் என இணைய உலகில் எந்நேரமும் மக்கள் சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி தொடர்ந்து இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இணையத்தை பயன்படுத்துவோர் இந்தியாவில் அதிக அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் இணையத்தின் ட்ரெண்ட் குறித்து மேரி மீகர் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி உலகளவில் 2018-ம் ஆண்டு 380 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பயன்பாடு உலகளவில் 2017-ம் ஆண்டு 49 சதவீதமாக இருந்தது. பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வின் படி அதிக இணையப் பயனாளர்கள் கொண்டதில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனா 21 சதவீதத்தை பெற்றுள்ள நிலையில், 12 சதவீத புள்ளிகளை பெற்று இணையப் பயனாளர்களை அதிகமானோர் கொண்டுள்ள பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை 8 சதவீத இணையப் பயனாளர்களுடன் அமெரிக்கா உள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.