• August
    24
    Saturday

Main Area

களிமண்ணிலே கலைவண்ணம் காண மாணவர்களுக்கு சிறப்பு கண்காட்சி


"ஏம்ப்பா, போன வருஷமே முக்கி முணகித்தான் பாஸ் பண்ணினே, இந்த வருஷமாச்சும் ஒழுங்கா படிப்பேன்னுப் பாத்தா, 
திரும்பவும் போனை நோண்டிகிட்டு இருந்தா என்ன அர்த்தம்?"
"போன்ல ஏதாச்சும் பரிட்சை வைங்க, ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி காட்றேன்னு அர்த்தம்" எல்லா வீட்டிலும் இந்த மாதிரி உரையாடல்கள் சர்வ சாதாரணம். வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தில் இருந்து வரும் முக்கியமான அழைப்புகளைக்கூட தெரிந்தோ தெரியாமலோ கட் பண்ணிவிட்டு கேம் ஆடும் குழந்தைகளை எப்படி அதிலிருந்து மீட்பது? செல்போனே கதி என கிடக்கும் குழந்தைகளின் படிப்பாற்றலையும் படைப்பாற்றலையும் உயிர்ப்பிப்பது எப்படி என கடலூரில் குழந்தைகளுக்கான சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

Clay Exhibition

குப்பை என வீசப்படும் பொருட்களையும், கலைநயமிக்க பொருளாக எப்படி மாற்ற முடியும் என்பது குறித்து கண்காட்சியில் செயல்விளக்கம் காட்டப்பட்டது. களிமண்ணால் கலைநயமிக்க பொம்மைகள் செய்வது,  போட்டோ ஃபிரேம் செய்வது என நிபுணர்களால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. குழந்தைகளை கவனிக்கும் வேலை மிச்சம் என்பதால் செல்போனை அவர்கள் கையில் கொடுத்து பழக்குவதைவிடவும், இதுபோல படைப்புத்திறனை ஊக்குவிக்கும் விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்துவது பெற்றோரின் கடமையாகும்.
 

gunaseelan Mon, 07/29/2019 - 12:48
How to Avoid Children's Smartphone Usage Clay Special Exhibition Encourage Creativity Activities With Clay லைப்ஸ்டைல் குழந்தை வளர்ப்பு

English Title

Special Clay Exhibition for students in Cuddalore

News Order

0

Ticker

1 பச்சிளம் குழந்தைக்கு பசி ஏற்படுவதை எப்படி அறிவது?

பிறந்த குழந்தைக்கு பசி எடுத்தால், பால் குடிப்பது, பாலை உறிஞ்சுவது போன்ற செய்கைகளை செய்யும், குழந்தை அன்னையின் மார்பகத்தை நோக்கியே முகத்தைக் கொண்டு வரும். தலையை திருப்பிக் கொண்டே இருக்கும், குழந்தைக்கு அதிகம் பசி எடுத்தால், அழ ஆரம்பித்து விடும்.

மேலும் குழந்தைக்கு இரவில் அதிகம் பசி எடுக்கும், குழந்தைக்கு பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வும் இரவில் அதிகம் ஏற்படும்.முதல் மாதத்தில் குழந்தைக்கு எடை குறைவு ஏற்பட்டால், பயம் கொள்ள வேண்டாம். பின் சிறிது நாட்களிலேயே குழந்தையின் எடை கூடத் தொடங்கி, இழந்த எடையை குழந்தையின் உடல் பெற்று விடும்.

குழந்தைகளுக்கு எப்பொழுது உணவு அளித்தாலும், அவர்கள் வயிறு நிரம்பும் வரை மட்டுமே உணவு அளிக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக உணவினை திணிக்க கூடாது.

Aarthi Sat, 02/02/2019 - 14:56
baby hungry tips baby லைப்ஸ்டைல் குழந்தை வளர்ப்பு

English Title

how to find weather baby is hungry?

News Order

0 பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்?

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்துக்குள் மொட்டை போட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பின்னணி என்னவென்று தெரியுமா?

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்துக்குள் மொட்டை அடிக்க வேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.

ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா
நாம் அம்மாவின் கருவறையில் ரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். 

baby

சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில் தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.  

அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர். 

baby

எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின் செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை அடிப்பர். அதற்கு காரணம், ஒரு வயதில் அடித்த மொட்டையில் சில கழிவுகள் வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும். 

baby

 

இதற்காகவே ஒரு வயதிலும், மூன்று வயதிலும் மொட்டை சாமியின் பெயரில் அடிப்பர். இதன் உண்மை பின்னணியே இதுதான்.  முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.

அதை கண்டுகொள்ளாமல் மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

manikkodimohan Sat, 01/12/2019 - 14:32
toddlers tonsure Lifestyle baby லைப்ஸ்டைல் குழந்தை வளர்ப்பு

English Title

why do tonsure for toddlers

News Order

0 குழந்தைகளின் அழுகையை நிறுத்த வழிகள்!!

பொதுவாக குழந்தைகள் பசியாயிருந்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, சோர்வடைந்தாலோ, அல்லது மகிழ்ச்சியில் கூட அழுவார்கள். ஏன் பக்கத்தில் வேறு ஏதேனும் குழந்தைகள் அழுதாலும் அழுவார்கள். அப்படி உங்கள் குழந்தை அழைத்த தொடங்கினால் என்ன செய்யலாம்??

 

**குழந்தை அழுதால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். விடாது தொடர்ந்து அழுதால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மற்றபடி வயிற்று வலியாலும், அசௌகரியமான சூழ் நிலையாலும் குழந்தை அழலாம். இதற்கு பயப்படத் தேவையில்லை.

 

**சில நேரங்களில் குழந்தைக்கு பசித்தால் அவர்கள் அழுவார்கள். எனவே உணவு வேளைகளில் அவர்கள் அழுதால் அவர்களுக்கு உணவளியுங்கள்.

 

**உங்கள் குழந்தை விரல் சூப்பினால் அந்த பழக்கத்தில்ருந்து விடுவிக்கச் செய்யுங்கள். அவை ஆரோக்கியம் மற்றும் பற்களுக்கு நல்லதல்ல. விரல் சூப்புவதை நிறுத்தும்போது அழுதால் அவர்களுக்கு மாற்றாக பால் பாட்டிலை தந்து பாருங்கள்.

baby

**சில நேரங்களில் தனிமையில் இருப்பதாக உணர்ந்தாலும் குழந்தைகள் அழும். அப்படியானால் அவர்களை கட்டி அரவணைத்து அவர்கள் பாதுகாப்பை உணருமாறு செய்யுங்கள்.

 

**சில சமயங்களில் பொழுபோக்கில்லாதபோது அவர்கள் அழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அவர்களை மெல்ல தூக்கிக் கொண்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்து விட்டு வாருங்கள்.

 

**அழும் குழந்தையை சமாளித்து அவர்கள் கவனத்தை திருப்ப பொம்மைகளும் உதவும். அதனால் எப்போதும் பொம்மைகளை கைவசம் வைத்திருங்கள்.

baby

**சில நேரங்களில் வானிலையும் அவர்கள் அழுவதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தை உள்ள அரை மிகுந்த சூடாகவோ அல்லது மிகுந்த குளிராகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

**மேற்கூறப்பட்ட எதுவும் பயன் தர வில்லையென்றால் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். செரிமானக் கோளாறுகளும் குழந்தையை சிலநேரங்களில் அழவைக்கும். மருத்துவத்துக்கு பின்னர், அழுகையை தாமாகவே நிறுத்தி விடும்.

manikkodimohan Fri, 12/28/2018 - 15:33
Baby cry crying baby life style baby குழந்தை வளர்ப்பு

English Title

How to stop baby's cry

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.