• February
    18
    Tuesday

Main Area

Main



மோடியை பாராட்டிய பிறகும், சி.பி.ஐ.யிடம் சிக்கி கொண்ட ப.சிதம்பரம்.....

ப சிதம்பரம்
ப சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், கட்டுப்பாடான குடும்பம் என்பது தேசபற்றின் ஒரு அங்கமே, பொருளாதாரத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசி இருந்தார். பா.ஜ. அரசை எப்போதும் எதிர்த்து வந்த காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் திடீரென பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.

மோடி

கட்டுப்பாடான குடும்பம், பொருளாதாரத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி ஆகிய மோடியின் 3 கருத்துக்களை ப.சிதம்பரம் பாராட்டி பேசி இருந்தார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தது. இதுக்கு என்ன காரணம்ன்னு தெரியாம பல காங்கிரஸ் தலைவர்கள் குழம்பியது குறிப்பிடத்தக்கது.

சி.பி.ஐ.

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் தான் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்துதான் மோடிக்கு அவர் பாராட்டு பத்திரம் வாசித்து இருக்கலாம் என சில கூறுகின்றனர். ஆனால், சி.பி.ஐ. நேற்று ப.சிதம்பரத்தை வீட்டுக்குள் நுழைந்து கைது செய்தது. 

2018 TopTamilNews. All rights reserved.